• India
```

நீதா அம்பானி தனிப்பட்டு 2,510 கோடி சொத்துக்கு உரிமையாளாரா! அப்போ..முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு?

Nita Ambani Net Worth | Nita Ambani Latest News

Nita Ambani Net Worth -நீதா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் இந்தியாவின் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார்.மேலும் இவரின் சொத்து மதிப்பு ரூ 2,510 கோடி ஆகும்.

Nita Ambani Net Worth -கோடீஸ்வரர்களின் வரிசையில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, அவரது தனிப்பட்ட சாதனைகளால் இந்தியாவின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். 


1964 ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்த நீதா, வணிகவியல் பட்டதாரி ஆக இருந்ததோடு, ஒரு பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞராவார். அவர் தனது பணிக்குழந்தையை ஆசிரியராகத் தொடங்கியதுடன், 2010 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் அறக்கட்டளையை நிறுவினார். இந்நிறுவனம் மூலம் இந்தியாவில் கல்வி, விளையாட்டு மற்றும் பெண்கள் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றி வருகிறார். 


மேலும், நீதா அம்பானி, Mumbai Indians கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளராக விளையாட்டுத் துறையில் அழியாத பெயர் பெற்றார்.இதைத் தொடர்ந்து அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிலும் உறுப்பினராக இருந்து வருகிறார், இது அவரது விளையாட்டு பங்களிப்பின் அங்கீகாரமாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின் அடிப்படையில், நீதா அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 2,510 கோடி ஆகும்.முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 11,650 கோடி அமெரிக்க டொலர் என மதிப்பீடு செய்யப்படுகிறது.நீதா அம்பானியின் சொத்து மதிப்பை காட்டிலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பே அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.