Instant Chapati Business - மாவு பிசைந்து, உருண்டை போட்டு, அதை மறுபடி தேய்த்து, அதை கல்லில் போட்டு சப்பாத்தி ஆக்க தற்போதெல்லாம் ஒருவருக்கும் நேரம் இல்லை, அதற்காகவே வந்தது தான் இன்ஸ்டன்ட் சப்பாத்தி, அப்படியே பாக்கெட்டை உடைத்து கல்லில் போட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி, நவீன உலகில் ஓடிக்கொண்டே இருக்கும் பலரும் எல்லாமே இன்ஸ்டன்டாக வேண்டும் என நினைக்கிறார்கள்.
அந்த வகையில் இன்ஸ்டன்ட் சப்பாத்தி ஒரு பெஸ்ட் ஐடியா தான், சரி அதை எப்படி தொழிலாக செய்வது என்றால் முதலில் முதலீடு, குறைந்த பட்சம் ஒரு 5 இலட்சம் ஆவது கையில் இருக்க வேண்டும், மெசினுக்கு ஒரு 2 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை ஆகலாம், குறைந்த விலையில் 40,000 ரூபாய்க்கும் வாங்க முடியும் ஆனால் அது செமி ஆட்டோமேட்டடு, ஒரு மணி நேரத்திற்கு 450 சப்பாத்திகள் வரை மட்டுமே செய்ய இயலும்.
கொஞ்சம் அதிகம் விலை கொடுத்து வாங்கும் போது முழுவதும் ஆட்டோமேட்டடாக ஒரு மணி நேரத்திற்கு 2000 சப்பாத்திகள் வரை செய்யலாம், கமெர்சியலாக பயன்படுத்துவதற்கு கொஞ்சம் விலை அதிகம் கொடுத்து வாங்கினால் நன்றாக இருக்கும், சப்பாத்திகளை இடுவதற்கு கொஞ்சம் அட்ராக்டிவான கவர்களை தேர்வு செய்வது மிக அவசியம், அதை வைத்து தான் வாடிக்கையாளர்களை கவர முடியும்.
நீங்கள் ஒரு நிறுவனம் என்னும் போது மொத்த விலைக்கு கொடுக்கும் போது 10-15% தான் இலாபம் இருக்கும், நாள் ஒன்றுக்கு உள்ளூருக்குள் ஒரு 2000 கவர்கள் அடித்து சந்தைப்படுத்தும் போது தினசரி ரூ 8000 வரை இலாபம் பார்க்க முடியும், சந்தைப்படுத்துவதில் நீங்கள் கில்லாடியாக இருந்தால் தமிழகம் முழுக்க மார்க்கெட்டிங் செய்யும் பட்சத்தில் மாதத்தில் 15 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும்.