Allcargo Latest News -சஷி கிரண் ஷெட்டி, கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு சாதாரண தொழில் முனைவோராக தனது பயணத்தை தொடங்கினார். இன்று, அவரது நிறுவனம், ஆல் கார்கோ குழுமம் (ALLCARGO GROUP), ரூ.7,000 கோடி மதிப்புடன் உலகின் முன்னணி LCL சரக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கிறது.
Allcargo Latest News -கர்நாடகாவின் சிறந்த தொழில்முனைவோரில் ஒருவரான சஷி கிரண் ஷெட்டி, தனது கடின உழைப்பு மற்றும் உறுதியால் உலகளாவிய வளர்ச்சியடைந்த ஒரு நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார்.
மேலும், இவருடைய இளம் வயதிலேயே, வெறும் ரூ.25,000 முதலீட்டுடன் தனது பயணத்தை தொடங்கிய ஷெட்டி, இப்போது ஆல் கார்கோ குழுமம் (Allcargo Group) மூலம் சர்வதேச அளவில் முன்னணி சரக்கு ஒருங்கிணைப்பாளராக திகழ்ந்து வருகிறார். அதன் மதிப்பு சுமார் ரூ.7000 கோடி ஆகும்.
மும்பையில் தனது தொழில் அனுபவத்தை தொடங்கிய ஷெட்டி, பல்வேறு போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தை கற்றுக்கொண்டார்.அதை பயன்படுத்தி, 1982 இல் Trans India Freight Services என்ற நிறுவனத்தை தொடங்கினார். 1994 இல் ஆல் கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவப்பட்டது, இப்போது இது 180 நாடுகளில் 4,500 பேர் வேலை செய்யும் உலகளாவிய குழுமமாக வளர்ந்து இருக்கிறது.
LCL ஒருங்கிணைப்பு (Less Container Load) மூலம், சிறிய அளவிலான ஏற்றுமதிகளை குழுப்படுத்தி கொள்கலன்களை நிரப்புவதில் வல்லமை பெற்ற ஆல் கார்கோ, ஷெட்டியின் தூரநோக்குப் பார்வையால் மிகப்பெரிய வெற்றி கண்டது. தொழில்முனைவோருக்கு, அவரது கடின உழைப்பு, புதுமையை ஏற்றுக்கொள்ளும் திறன், மற்றும் தெளிவான வளர்ச்சி யுக்திகள் உத்வேகம் தருகின்றன.