Mara Valli Kilangu Chips Business Ideas - நல்ல இலாபம் தரும் வகையில் மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தொழில் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Maravalli Kilangu Chips Business Ideas - பொதுவாக மரவள்ளிகிழங்கு என்பது பல மருத்துவ குணங்கள் நிறைந்தது, நேரடியாக அதை உட்கொள்ள முடியாது, ஒரு சிலர் தோலை நீக்கி அவித்து உண்ணுவர், சிலர் அதை சீவி சிப்ஸ் போல மிளகாய் பொடி, மிளகு தூள் போட்டும் உட்கொள்வர், நல்ல செரிமானத்திற்கு உகந்தது, வைட்டமின் K, கால்சியம் மற்றும் அயர்ன், மாங்கனீசு உள்ளிட்ட மனிதர்களுக்கு அத்தியாவசியமான பல சத்துக்கள் மிகுந்தது.
சரி, மரவள்ளி கிழங்கு சிப்ஸ்சை ஒரு தொழிலாக செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாக கிழங்கு வகைகளில் மற்ற கிழங்குகளை விட சீப்பாக கிடைப்பது என்பது மரவள்ளி கிழங்கு தான், ரீட்டைல் ஆக வாங்கும் போது கூட கிலோ 30 ரூபாய்க்கு தான் விற்கிறார்கள், மொத்த விலைக்கு வாங்கினால் கிலோ ரூ 20 முதல் 25 க்கே கொள்முதல் செய்து விட முடியும்.
சிப்ஸ் சீவுவதற்கு தற்போது மெசின்களும் இருக்கின்றன, உங்களுக்கு கை சீவல் தான் பெஸ்ட் என்றால் அப்படியும் கிழங்குகளை சீவிக் கொள்ளலாம், ஆனால் நேரம் அதிகம் ஆகும், மெசின்களால் சீவும் போது நன்றாக முறு முறுப்பாக இருக்கும், நேரமும் மிச்சப்படும், பொதுவாக ஒரு கிலோ மரவள்ளி கிழங்கு சிப்ஸ் போடுவதற்கு கிட்டதட்ட 3 கிலோ மரவள்ளி கிழங்கு தேவைப்படும், கொஞ்சம் கழிவுகள் வர தான் செய்யும்.
பொதுவாக ஒரு கிலோ மரவள்ளி கிழங்கு போடுவதற்கு 3 கிலோ மரவள்ளி, வத்தல் தூள், எண்ணெய் எல்லாம் சேர்த்தால் ஒரு 100 ரூபாய் வீதம் ஆகலாம், மொத்தவிலைக்கு கிலோ 170 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கிறார்கள், ரீட்டைலுக்கு விற்கும் போது கிலோ 240 முதல் 350 வரை விற்கிறார்கள், கடைகளுக்கு நேரடியாக சென்றும் போடலாம், கடைகள் மூலம் ரீட்டைல் விற்பனையும் செய்யலாம்.
" வாரத்திற்கு ஒரு 60 கிலோ போட்டு விற்பனை செய்கிறீர்கள் என்றால், மாதத்திற்கு 250 கிலோவை நெருங்கும், சராசரி விலை ரூ 225 என்று வைத்தால் கூட மாதத்திற்கு 56,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும் "