Food Cart Business - நல்ல இலாபம் தரும் வகையில் மொபைல் கேண்டீன் எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Mobile Canteen Business Ideas Tamil - முதலில் மொபைல் கேண்டீன் என்பது என்ன என்பது குறித்து பார்த்து விடலாம், கிட்ட தட்ட உணவகம் தான், ஒரு நகரும் உணவகம் அவ்வளவு தான், பொதுவாக அவசரத்தில் ஒரு இடத்தில் தொழிலை துவங்கி விடுவோம், ஆனால் அந்த இடத்தில் அந்த தொழில் சரிவராது என்ற பின்னர் வேறு இடத்திற்கு மாற்ற துடிப்போம், ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இருந்து விடாது.
வாடகை கடையாக இருக்கலாம், 1 வருடம் அல்லது 3 வருடம் குத்தகைக்கு எடுத்த கடையாக இருக்கலாம், பொருட்களை மூவ் செய்வதில் சிரமம் இருக்கலாம், இவ்வாறான சிரமங்களில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த தொழிலாக இந்த மொபைல் கேண்டீன் இருக்கும், மொபைல் கேண்டீனில் இட்லி, பூரி, சப்பாத்தி, தோசை, பிரெட் ஆம்லேட், பிரைடு ரைஸ்கள் என பல வகையான உணவுகள் வைத்து விற்கலாம்.
How To Start Own Business-ஒரு இடத்தில் சரியாக போகவில்லை என்றால் அப்படியே இடத்தை மாற்றிக் கொண்டே செல்லலாம், இதன் மூலம் தினசரி விற்பனையைசரியாக கையாள முடியும், நஸ்டமில்லா தொழிலை பார்க்க முடியும், பெரும்பாலும் மொபைல் கேண்டீன்கள் பஸ் ஸ்டாண்டுகள், கல்லூரிகள், பெரிய சந்தைகள், மெயின் ரோடுகளின் அருகில் வைக்கப்படுகின்றன, இதனால் எளிதாக மக்கள் கடையை நோக்கி வருவார்கள்.
பொதுவாக ஒரு மொபைல் கேண்டீனை ரெடி செய்ய 10 முதல் 12 இலட்சம் வரை ஆகலாம், கடனால பெற்றால் கூட வரும் இலாபத்தின் மூலம் 3 வருடத்தில் அடைத்து விடலாம், கடையை நகர்த்தி கொண்டே எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ள முடியும் என்பதால் இலாபத்தில் சமநிலை இருக்கும், தினசரி சரியாக கடையை செயல்படுத்திடும் பட்சத்தில், மாதல் 1.50 இலட்சம் வரை இத்தொழிலில் வருமானம் பார்க்க முடியும்.