முதலில் சீசன் தொழில் என்பது என்ன?
பொதுவாகவே ஒவ்வொரு பருவ காலத்திலும் ஏதாவது ஒரு விளை பொருள் அதிகமாக சந்தைகளில் புழங்கும், அது காய்கறிகளோவோ, பழங்களாகவோ வேறு ஏதாவது விளை பொருள்களாகவோ இருக்கலாம், இவ்வாறாக அந்த பருவத்தில் அதிகம் விளைகின்ற ஒரு பொருளை தெரிவு செய்து நேரடியாக கொள்முதல் செய்து அதனை சந்தைப் படுத்துதல் ஆகும், பொதுவாக ஒவ்வொரு சீசனும் விளைபொருள் மாறிக் கொண்டே இருக்கும், அது போல இத்தொழிலில் அந்தந்த பருவத்திற்கேற்ப சந்தைப்படுத்தும் பொருளும் மாறிக் கொண்டே இருக்கும்.
சரி, எப்படி இந்த தொழிலை துவங்குவது?
இந்த சீசன் தொழிலை துவங்குவதற்கு முன், பருவ கால விளைச்சல் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிக மிக அவசியம், ஒவ்வொரு பருவத்திலும் என்ன என்ன நன்கு விளைகிறது என தெரிந்து கொண்டால் தான் இந்த தொழிலில் நன்கு சிறக்க முடியும், உதாரணத்தில் தமிழகத்தில் பிப்ரவரி - ஜீன், அக்டோபர் - நவம்பர் என இரண்டு சீசன்களில் மாம்பழம் நங்கு விளையும், உருளையை எடுத்துக் கொண்டால் மே முதல் ஜூன் வரை நன்கு விளையும்.
தர்பூசணி பழத்தை எடுத்துக் கொண்டால் கோடை காலத்தில் அதிகமாக சந்தைகளில் பார்க்க முடியும், இவ்வாறாக ஒவ்வொரு பருவத்திலும் அதிகள் விளைகின்ற மக்கள் அந்தந்த பருவங்களில் அதிகம் தேடுகின்ற பொருள்களை சந்தைப் படுத்துவதன் மூலம் அதிக இலாபம் பார்க்க முடியும், மிச்சம் இல்லாத நஷ்டம் இல்லாத விற்பனைக்கும் இந்த சீசன் தொழில் வழி வகுக்கும்.
சரி, இலாபம் எப்படி இருக்கும், முதலீடு என்ன?
குறைந்த பட்சம் ஒரு குட்டி யானை வாகனம் ஆவது இருப்பது இந்த தொழிலுக்கு அவசியம், முதலீடு என்பது பொருள்களுக்கான முதலீடு மட்டும் தான், தொழிலை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வண்டியை நிறுத்தி, ஒரு மைக் மட்டும் வைத்துக் கொண்டு செய்து கொள்ளலாம், ஒரு இடத்தில் விற்பனை சரியாக இல்லை என்றால் உங்களால் இடத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்.
இலாபத்தை பொறுத்தவரை சீசன்களில் பொருள்கள் உங்களுக்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும், உதாரணத்திற்கு ஒரு தர்பூசணி 20 ரூபாய்க்கு கிடைக்கும் பட்சத்தில், உங்களுக்கு கிடைக்கும் நீங்கள் அதை 50 ரூபாய் வரை சீசன்களில் விற்க முடியும், அவ்வாறாக ஒவ்வொரு விளைபொருள்களிலும் சீசன்களில் அதிக இலாபம் பார்க்க முடியும், சரியான சீசனில் சரியான விளைபொருளை தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 2,000 முதல் 3,000 ரூபாய் வரை இலாபம் பார்க்க முடியும்.