• India
```

வீட்டில் இருந்தே தினசரி ரூ 2000 வருமானம்..நல்ல இலாபம் தரும் டெய்லரிங்..!

Tailoring Business Ideas For Woman

By Ramesh

Published on:  2024-10-24 12:58:10  |    946

Tailoring Business Ideas For Woman - பெண்கள் வீட்டில் இருந்தே தினசரி ரூ 2000 வரை சம்பாதிக்க வழி வகை செய்யும் டெய்லரிங் தொழில் குறித்து இங்கு பார்க்கலாம்.

Tailoring Business Ideas For Woman - பொதுவாக டெய்லரிங் பெண்களுக்கு மிகவும் பிடித்த தொழிலாக அறியப்படுகிறது, பெரும்பால பெண்கள் தங்கள் சுய தொழிலை டெய்லரிங் மூலமாக தான் ஆரம்பிப்பதாக ஒரு தகவல், அந்த வகையில் டெய்லரிங் தொழில் எப்படி வீட்டில் இருந்தே செய்வது, அதற்கான முதலீடு என்ன, டெய்லரிங் தொழிலில் எந்த வகையில் இலாபம் இருக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சரி முதலில் டெய்லரிங் தொழில் எப்படி அமைப்பது, முதலீடு என்ன?

உங்களுகு டெய்லரிங் தெரியும் பட்சத்தில் நேரடியாக மெசின் வாங்க சென்று விடலாம், தெரியாது அரைகுறை என்னும் பட்சத்தில் அரசு சார்பில் இலவசமாக 6 மாத கோர்ஸ் ஒன்று சர்ட்டிபிகேட்டுடன் நடத்தப்படுகிறது, உங்களது மாவட்ட வேலைவாய்ப்பு முகாமிற்கு சென்றால் எங்கு நடத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம், சரி கற்றவுடன் மெசின் எங்கு வாங்குவது, பெரிய டவுணில் மொத்த கடைகள் இருக்கலாம்.


மெரிட், ரமணி, உஷா பொன்ற பிராண்டுகள் நீடித்து உழைக்க கூடியது, மோட்டாரோடு சேர்ந்து ஒரு 16,000 ரூபாய் வரை ஆகலாம். உங்களுடைய மொத்த முதலீடே அவ்வளவு தான். இது போக நூல், லைனிங் துணி உள்ளிட்ட கொஞ்சம் ஸ்டாக்குகளுக்கு ஒரு மூன்றாயிரம் ஆகலாம், மொத்தமாக 20,000 என்று வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் கமெர்சியல் மெசின் வாங்குகிறீர்கள் என்றால் கொஞ்சம் காஸ்ட்லி, வீட்டில் வைத்தே தொழில் செய்கிறீர்கள் என்றால் நார்மல் மெசினே போதுமானது.

சரி, இலாபம் எப்படி இருக்கும்?

பெண்கள் வீட்டில் இருந்தே நல்ல சம்பாத்தியம் பெறுவதற்கு தையல் தொழில் ஒரு அசத்தலான தொழில், ஒரு சீலைக்கான சட்டை தைப்பதற்கு 200 முதல் 300 ரூபாய் வரை வாங்குகிறார்கள், சிட்டிகளில் 500 ரூபாய் கூட வாங்குகிறார்கள், தினசரி ஒரு 5 முதல் 10 சட்டைகள் தைத்தால் கூட, தினமும் ரூ 1000 முதல் ரூ 2000 வரை வருமானம் பார்க்க முடியும், கஸ்டமர்கள் எப்படி வருவார்கள் என்ற கவலை எல்லாம் வேண்டாம், உறவினர்கள், அண்டை வீட்டார்கள் தான் உங்களது கஸ்டமர்கள் அதனால் கவலை கொள்ள தேவையே இல்லை, நீங்கள் நன்றாக தைத்து கொடுக்கும் பட்சத்தில் நிரந்தர வருமானம் நிச்சயம் இருக்கும்.