Gym Business Ideas - நல்ல இலாபம் தரும் வகையில் ஜிம் வைத்து சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Gym Business Ideas - பொதுவாக ஜிம் வைப்பதற்கு 1500 சதுர அடி முதல் 3000 சதுர அடி வரை இடம் தேவைப்படும், சொந்த இடமாக இருந்தால் இன்னும் சூப்பர், இடத்தை பதிவு செய்து கொண்டு, மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் ஜிம் வைப்பதற்கான லைசென்ஸ் வாங்கி கொள்ள வேண்டும், ஒரு சிலர் கல் ஜிம்களை விரும்புவர், ஒரு சிலர் மெசினரி ஜிம்களை விரும்புவர் இரண்டும் இருந்தால் இன்னும் பெட்டர்.
ஒரு நகரத்தின் மையத்தில் இருக்கும் பட்சத்தில் பெண்களும் ஜிம்களுக்கு வரக்கூடும், அந்த வகையில் பெண்களுக்கு தனி மெசினரிகள் இருப்பது அவசியம், ஒரு யோகா அறை, ஜிம்மில் வருபவர்களின் பொருட்களை வைப்பதற்கான ரேக்குகளுடன் ஒரு ரூம், பாதுகாப்பு உபகரணங்கள், ட்ரெயினர், யோகா ஆசிரியர் என இவ்வளவும் ஒரு ஜிம்மில் இருப்பது அவசியம்.
சிலர் தியானத்திற்காக வரக்கூடும் என்பதால் ஒரு சில ஜிம்களில் அமைதியான சூழலில் தியான அறைகளும் இருக்கின்றன. முதலீடு என்னும் போது ஜிம்மிற்கான செட் அப்களுடன், மெசினரிகள், உபகரணங்கள் என எல்லாம் சேர்த்து ஒரு 10 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை ஆகலாம், ஒரு முறை முதலீடு தான், அதற்கு பின்னர் உங்களுக்கு மெயிண்டனன்ஸ் செலவு மட்டும் தான்.
பொதுவாக கிராமம் சார்ந்த இடங்களில் கல் ஜிம்களுக்கு மாதம் ரூ 500 முதல் ரூ 1000 வரை வசூலிக்கிறார்கள், கல் ஜிம் வைப்பதற்கான முதலீடு என்பது ஒரு 5 இலட்சத்திற்குள் தான் வரும், மெயிண்டனன்ஸ் செலவும் கம்மி என்பதால் ஒரு முறை முதலீடு செய்தால் அதற்கப்புறம் அனைத்தும் இலாபம் தான், சராசரியாக ஒரு 20 பேர் ஜிம்களுக்கு தொடர்ச்சியாக வந்தாலும் கூட மாதம் 20,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும்.
நகரம் மற்றும் பெரு நகரங்களை பொறுத்தவரையில் ஜிம்களுக்கு ரூ 1,500 முதல் 6000 வரை வசூலிக்கிறார்கள், நகரம் மற்றும் பெரு நகரங்களில் எல்லாம் ஒரு ஜிம்களுக்கு சராசரியாக 30 முதல் 50 வரை தினசரி மெம்பர்கள் இருக்கிறார்கள், அந்த வகையில் நகரங்களில் பெரிய அளவில் ஜிம்கள் வைப்பவர்கள் மெயின்டனன்ஸ் செலவெல்லாம் போக மாதம் ரூ 1.50 இலட்சம் வரை இலாபம் பார்க்கிறார்கள்.
ஜிம் வைக்க நீங்கள் ட்ரெயினராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, ட்ரெனியரை நியமித்து கூட ஜிம் வைக்கலாம், நீங்களே ட்ரெயினராக இருந்தால் ஒரு 20 சதவிகிதம் இலாபம் மிச்சப்படும், பெண்களுக்கு தனியாக ட்ரெயினர் இருப்பது அவசியம், இது போக யோகாவிற்கு தனியாக ட்ரெயினர் போட்டு அதிலும் தனியாக ஒரு கிளாஸ் நடத்தும் பட்சத்தில் அதிலும் தனியாக ஒரு இலாபம் கிட்டும்.