• India
```

கிராமங்களில் இருந்து கொண்டே...இலட்சங்களில் வருமானம் வேண்டுமா...அப்படின்னா ஆடு மாடு வளர்ப்பு தொழில் தான் சரியா இருக்கும்...!

Cow Farming Business​ | Village Business Ideas In Tamil

By Ramesh

Published on:  2024-12-04 20:24:22  |    1026

Animal Husbandry Business Ideas - நல்ல இலாபம் தரும் வகையில் ஆடு மாடு வளர்ப்பு தொழில் செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Animal Husbandry Business Ideas - ஆடு மாடு வளர்ப்புக்கு முதலில் தேவையானது ஒரு பரந்து விரிந்த இடம், ஏதாவது விவசாய நிலமோ அல்லது மேய்ச்சல் நிலமோ உங்களுக்கு சொந்தமானதாக இருந்தால் நல்லது, இல்லை என்றால் விவசாயத்திற்கு பயன்படுத்தபட்ட ஒரு நிலத்தை சொந்தமாக வாங்கி கொள்வது நல்லது, அவ்வாறாக சொந்தமாக வாங்கி விட்டால் மாடுகளை வேறு இடத்திற்கு மேச்சலுக்கு பழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

மாடுகளை ஆடுகளை தனித்தனியாக கட்டுவதற்கு கொட்டகை போட்டுக் கொள்ள வேண்டும், இரை தொட்டி தனியாக கட்டிக் கொள்ள வேண்டும், விவசாய நிலத்தில் நன்கு புல் பரப்புகள் நிச்சயம் இருக்கும், அதை கொஞ்சம் தண்ணீர் தெளித்து பராமரித்தால் மாட்டின் மேச்சலுக்கு அதுவே போதுமானதாக இருக்கும், காலை முதல் மாலை வரை நிலத்துக்குள்ளேயே அவிழ்த்து விட்டு மேயச் செய்யலாம்.



இரவு மட்டும் புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட மாட்டு தீவனங்களை ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கொடுத்தால் போதும், முதலீடு என்னும் போது நிலம், ஒரு 10 ஆடுகள் (7 பெண் வகை, 3 ஆண் வகை) 10 மாடுகள் (7 பெண் வகை, 3 ஆண் வகை), கூரை, தொட்டி அமைப்பு என எல்லாம் சேர்த்து ஒரு 10 முதல் 12 இலட்சங்கள் வரை ஆகலாம், இவ்வளவு முதலீடு செய்கிறோமே இலாபம் இருக்குமா என்றால் நிச்சயம் இருக்கும்.

மாடுகள் தினசரி ஒரு 30 லிட்டர் பால் கறந்தால் கூட, அதை பால் நிறுவனங்களுக்கு கொடுத்தால், தினசரி ரூ 1,000 முதல் 1,500 வரை வருமானம் பெற முடியும், கருவுற்ற மாடுகளை, குட்டி கன்றுகளை மாட்டுச் சந்தைகளில் ரூ 20,000 முதல் 50,000 வரை விற்கலாம், ஆடுகளை கறிக்காகவும், வளர்ப்பிற்கும் ரூ 5,000 முதல் 10,000 வரை எடையை பொறுத்து விற்கலாம்.

" எப்படி பார்த்தாலும் மாதம் இலட்சங்களில் வருமானம் ஈட்டி விடலாம், அதுவும் கிராமங்களில் இருந்து கொண்டே சம்பாதிக்க முடியும், சரியான வளர்ப்பு, நல்ல தீவனம் இருக்கும் பட்சத்தில் உங்கள் மாடுகள், ஆடுகள் பெருகிக் கொண்டே இருக்கும், இலாபமும் பெருகும் "