Fashion And Beauty Business Ideas- பொதுவாகவே யாராக இருந்தாலும் தன்னை அழுகுபடுத்திக் கொள்வதில் அப்படி ஒரு மகிழ்வு இருக்கும், அத்தகைய வேலையை தொழிலாக எப்படி செய்ய முடியும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பியூட்டி பார்லர் எங்கு வைக்கலாம், எப்படி வைக்கலாம்?
பியூட்டி பார்லரை பொறுத்தவரை இடத்தின் தேர்வு என்பது மிக மிக முக்கியம், பொதுவாக நகரத்தின் மையத்தில் வைப்பது நல்ல இலாபம் தரும், பார்லருக்கான பெயரை வைப்பதில் மிக மிக கவனம் கொள்ள வேண்டும், கொஞ்சம் பேஷனாக பெயர் இருந்தால் அது பார்லருக்கு கூடுதல் மதிப்பை தரும், லைட்டிங்ஸ், பார்லரின் சேர்கள், டைல்கள், கண்ணாடிகள் என பார்லரின் சின்ன சின்ன விஷயங்களிலும் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு விஷயம் அட்ராக்டிவாக இருக்கும் போது தான் அது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும், அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பார்லரின் செட் அப்களை அமைப்பதில் முக்கியமாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும், வாடிக்கையாளர்களின் ஸ்கின்களை பாதிக்காத வகையில் நல்ல க்ரீம்களை தேர்வு செய்வதிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும், பார்லருக்கு பியூட்டிசியனை தேர்வு செய்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இடம் மற்றும் தொழிலை நகராட்சிகளில் பதிவு செய்து ஆவணங்களை வாங்கி வைத்துக் கொள்ளுதல் வேண்டும், ஏர்கண்டிசன் வசதி மிக மிக அவசியம், குறைந்த பட்சம் ஒரு 5 முதல் 6 இலட்சங்கள் வரை பார்லர் மற்றும் துணை பொருட்கள் வாங்க செலவு ஆகும், தேவையான முக்கியமான பொருட்களை முதல் முதலீட்டிலேயே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது
பார்லர் வழங்கும் வசதிகளை தெரிவு செய்தல்
பொதுவாக உங்கள் பார்லர் வழங்கும் வசதியை தெரிவு செய்தலில் அதிக கவனம் வேண்டும், உதாரணத்திற்கு உங்கள் பார்லரின் இரண்டு பியூட்டிசியன்களை நியமிக்கிறீர்கள் என்றால் அவர்களுக்கு என்ன என்ன தெரியும் என்பதை தெரிவு படுத்திக் கொண்டு அதற்கேற்ப உங்களது செர்வீஸ்களை விரிவு படுத்திக் கொள்ளலாம், பொதுவாக பார்லர்கள் வழங்கும் செர்வீஸ்கள் ஹேர் கட், ஹேர் ஸ்டைலிங், மசாஜ், மேனிக்யூர், பெடிக்யூர், மேக்கப், மெஹந்தி என வரையறுக்கப்படுகிறது. இதற்கு மேலும் கூட வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சர்வீஸ்களாக விரிவு படுத்தி கொள்ளலாம்.
விலை நிர்ணயம்
பிரைடல் மேக்கப், மெஹந்தி என்ற ஒரு காம்போவிற்கே பல பார்லர்கள் 40,000 ரூபாய்க்கு மேல் வசூலிக்கின்றனர், பல பார்லர்களின் விலை நிர்ணயங்களை அறிந்து கொண்டு அதில் இருந்து கொஞ்சம் இலாபத்தை குறைத்துக் கொண்டு முதலில் பார்லரை செயல்படுத்துவது நல்லது, ஆண்கள் பெண்களுக்கு தனி தனி வசதி செய்து கொடுக்க வேண்டும், சரியான நியாயமான விலை நிர்ணயம் மற்றும் தரம் என இவைகள் மட்டுமே உங்கள் நிறுவனத்தை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்ல உதவிகரமாக அமையும்.
சரி, இலாபம் எப்படி இருக்கும்
நல்ல மெயின் ஆன இடத்தில் வைக்கும் பட்சத்தில், நிறைய கல்யாண ஆர்டர்கள் கிடைக்கும், நியாயமான விலை என்னும் போது வாடிக்கையாளர்களும் அதிகமானால் மாதம் இலட்சங்களில் இலாபம் பெறலாம் என்பதில் எந்த ஐயமும் இல்லை.