Automobile Spare Parts Business-தற்போதெல்லாம் வாகனங்கள் இல்லாத வீடு என்பதே இல்லை, அதற்கேற்ப வாகன உதிரி பாகங்களை விற்கும் ஆட்டோமொபைல் கடைகளும் பெருகி வருகின்றன. அவ்வாறாக உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு ஆட்டோ மொபைல் கடை வைத்து நல்ல இலாபம் பார்ப்பது எவ்வாறு என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
How To Start Automobile Business-முதலில் நீங்கள் வைக்கப்போகும் கடைக்கான ஆவணங்களை சமர்ப்பித்து, நகராட்சி அல்லது மாநகராட்சியில் கடைக்கான உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும், ஆட்டோமொபைல் கடை என்னும் போது ஒரு மிகப்பெரிய முதலீடு அவசியம், உங்கள் கையில் முதலீடு இல்லை என்னும் போது வங்கிகளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தொழிலுக்கான கடன் கூட பெற்றுக் கொள்ளலாம்.
ஆட்டோமொபைல் கடை என்னும் போது ஒரு இரண்டு மெக்கானிக்குகளை கையில் வைத்து இருப்பதும் அவசியம், பொருள்களை மாற்ற வண்டிகளை ரிப்பேருக்கு விடுபவர்கள் உங்கள் கடைகளிலேயே பொருள்களை வாங்கி விட்டு அங்கேயே மாட்டி செல்லும் வசதி அவர்களுக்கு கிடைக்கும், பெரும்பாலான மெக்கானிக் ஷாப்புகள் தனி தனியாக இருப்பதால் அவர்கள் பொருள்களை ஒரு இடத்தில் வாங்கி, இன்னொரு இடத்தில் மாட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
அவ்வாறானவர்களுக்கு இந்த ஆட்டோமொபைல் கம்பைண்டு வித் மெக்கானிக் ஷாப் என்பது பெருமளவில் உதவிகரமாக இருக்கும், எலக்ட்ரிக் வாகனங்களை ரிப்பேர் செய்யும் ஒரு மெக்கானிக்கும் வைத்துக் கொள்வது அவசியம், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பார்ட்ஸ்களையும் வாங்கி வைத்துக் கொள்வது மிக அவசியம், பொதுவாகவே எலக்ட்ரிக் வாகனங்களை நார்மல் மெக்கானிக் ஷாப்புகள் ரிப்பேர் செய்ய மறுக்கின்றன, நாளடைவில் பசுமை எனர்ஜியை நோக்கி தேசம் நகருவதால் பெட்ரோல் வண்டிகளை விட எலக்ட்ரிக் வண்டிகளுக்கான சர்வீஸ் தான் அதிகம் தேவைப்படும்.
எங்கு ஸ்பேர் பார்ட்ஸ்களை கொள்முதல் செய்வது?
பொதுவாக உங்களுக்கு வாகனங்களில் ஒரிஜினல் ஸ்பேர்கள் தான் வேண்டும் என்றால், அந்தந்த வண்டிகளுக்கான நேரடியான டீலர்களையோ, கம்பெனிகளையோ தான் தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் வாகன ஸ்பேர்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் இந்தியா முழுக்க இருக்கின்றன, ஒரு குறிபிட்ட ஸ்பேர்களை ஒவ்வொரு கம்பெனிகள் தனித்தனியாக தயாரித்து வரும், அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டும் கடைக்கு சப்ளை வைத்துக் கொள்ளலாம்
நேரடி கொள்முதல் மட்டுமே எப்போதும் நல்ல இலாபம் தரும், இடையில் இருந்து எங்கோ நீங்கள் பொருள்களை கொள்முதல் செய்தால் விலை அதிகமாக விற்க வேண்டி வரும், கஸ்டமர்களை திருப்தியும் படுத்த முடியாது, தொழிலும் சிறக்காது, எங்கு அலைந்தேனும் நேரடி கொள்முதல் செய்து கொள்வதும் அவர்களுடன் பேசி தொடர்ந்து தொழிலுக்கு சப்ளை செய்ய சொல்லிக் கொண்டு ஒரு டை அப் செய்வதும் அவசியம் ஆகிறது.
சரி, இலாபம் எப்படி இருக்கும்?
இலாபத்தை பொறுத்த வரை விற்பனையில் 35 முதல் 45 சதவிகிதம் வரை இலாபம் இருக்கும், மெக்கானிக் ஷாப்பும் தனியாக கடையோடு இணைத்து இருக்கும் போது அதில் மட்டுமே மாதம் 30,000 முதல் 40,000 வரை இலாபம் இருக்கும், ஒட்டு மொத்தமாக வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் அளவில் உங்களது சேவை இருப்பின் இலட்சங்களில் இலாபம் மட்டுமே தனியாக நிற்கும்.