• India
```

இராஜபாளையம் நாய் வளர்ப்பில் பெரிதாய் சம்பதிக்க முடியுமா? சாதகங்கள், பாதகங்கள் என்ன?

Small Business Tamil​ | business ideas in tamil

Small Business Tamil​-இராஜபாளையம் நாய் வளர்ப்பில் இலட்சங்கள் சம்பாதிக்கலாம் என பலரும் சொல்லிக் கேட்டு இருப்போம், அதன் உண்மைதன்மை குறித்து தற்போது ஆராயலாம்.

முதலில், இராஜ பாளையம் நாய் குறித்து பார்க்கலாம்!


பாளையக்காரர்களின் ஆட்சியில், மன்னர்கள் வேட்டையாடுவதற்காக ஆந்திரப் பகுதிகளில்  இராஜபாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது தான் இந்த இராஜபாளையம் நாய்கள். பெரும்பாலும் இந்த நாய்கள் இராஜபாளையம் சுற்று பகுதிகளில் கிடைப்பதால் இது இராஜபாளையம் நாய் என்றே அழைக்கப்படுகிறது. பலரும் இந்த நாயை வேட்டைக்கு பயன்படுத்தி வந்ததால்  வேட்டை நாய் என்றும் அழைக்கப் படுகிறது.

சரி, இராஜபாளையம் நாய் வளர்ப்பில் பெரிதாய் சாதிக்க முடியுமா?

பொதுவாக ஒரு நாட்டு இராஜபாளையம் நாயின் சிறு குட்டி, ரூபாய் 5,000 வரை சந்தையில் விற்கப்படுகிறது. மாதம் பத்து குட்டிகள் விற்றால் தான் ஒரு 50,000 ரூபாய் வருமானத்தை எட்ட முடியும். ஆனால் அது சாத்தியமா என்றால் கொஞ்சம் கடினம் தான். காரணம் பொதுவாக இந்த வகை நாய்களை வாங்க நினைப்பவர்கள் பொதுவாக வேறு எந்த சந்தையிலும் வாங்க மாட்டார்கள். நேரடியாக இராஜபாளையம் மட்டுமே சென்று வாங்குவார்கள், அதனால் என்றுமே இந்த நாய்களுக்கு இராஜபாளையத்தில் மட்டுமே மவுசு

சரி, இராஜ பாளையம் நாய் வளர்ப்பில் இருக்கும் பாதகங்கள் என்ன?

பொதுவாக இராஜ பாளையம் நாய் வளர்ப்பை மற்ற நகரங்களில் தொழிலாக செய்பவர்கள், அந்த வகை நாயை மட்டும் வைத்து இருக்க மாட்டார்கள், பல்வேறு வளர்ப்பு பிராணிகளோடு அதையும் சேர்த்து விற்பனைக்கு வைத்து இருப்பார்கள், அதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. பொதுவாக இராஜபாளையம் நாய் மனிதர்களை விட அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளும், அதிலும் பெரும்பாலும் அசைவங்களையே வேண்டி நிற்கும். அதனால் அதை வளர்ப்பதற்கான செலவு என்பது மிக மிக அதிகம். அதை மட்டுமே வளர்த்து, அதை மட்டுமே விற்பனை செய்பவர்களுக்கு பெரிதாக இராஜபாளையம் நாய் வளர்ப்பு இலாபம் தராது.


பொதுவாக மதுரை, திருநெல்வேலி,விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த மக்கள் பலரும் இராஜபாளையம் நாய் வளர்ப்பில் சாதித்து விடலாம் என்று எண்ணி, 10 முதல் 15 குட்டிகளை பலருடைய பேச்சுக்களை நம்பி, தோட்டத்தில் வாங்கி போட்டு விட்டு, மாதத்திற்கு அதன் உணவு மற்றும் பராமரிப்பிற்கு மட்டுமே இலட்சங்களை செலவு செய்து வருகின்றனர். பலரும் அதை விற்கவும் முடியாமல், தீனி போடவும் முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

“ பொதுவாக உங்களுக்கு நாய் வளர்ப்பை தொழிலாக செய்ய வேண்டுமானால் அதற்கு இராஜ பாளையம் நாயை மட்டும் விற்பது என்பதை தெரிவு செய்ய வேண்டாம், பல பிராணிகளை நீங்கள் விற்று வாங்குபவர்களாக இருந்தால் ஒகே, ஆனால் அதை மட்டும் வளர்த்து விற்று இலாபம் பார்ப்பது என்பது மிகவும் கடினம், இன்னொன்று இராஜபாளையம் வகை நாய்களை யாரும் மற்ற மார்க்கெட்டுகளில் வாங்கவும் மாட்டார்கள்"