Mineral Water Business Ideas -பொதுவாக தற்போதெல்லாம் மீம் கிரியேட்டர்களிடையே, ‘தண்ணி கேன் போட வந்தேன் ப்ரோ’ என்ற டெம்ளேட் பேமஸ், ஆனால் அவர்களுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை, இந்த சாதாரண தண்ணீர் கேனில் எவ்வளவு இலாபம் இருக்கிறது என்று.
பொதுவாக இந்த தண்ணீர் கேன் டெலிவரி பிசினஸ்சை பொறுத்தவரை முதலில் ஒரு நம்பகத்தன்மை மிகுந்த நிறுவனம் தேவை. அதாவது குறித்த நேரத்தில் தண்ணீர் தேவையான நேரத்தில் சரியாக கொண்டு வந்து கொடுக்கின்ற நிறுவனம் என்பது முதலில் அவசியம் ஆகிறது. பெரிதாக முதலீடு என்பது அவசியம் இல்லை. உங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் இடையில் ஒரு நம்பகத் தன்மை ஏற்கனவே இருப்பின் கேனுக்கான டெப்பாசிட் கூட சில நிறுவனங்கள் கேட்பதில்லை.
சரி, எப்படி முதலில் தொழிலை துவங்குவது?
பொதுவாக இந்த தண்ணீர் கேன் டெலிவரி தொழிலுக்கு கடை தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, பலரும் வீட்டிலேயே வைத்து தான் தொழிலை செய்கிறார்கள். ஒரு நம்பகத்தன்மையான நிறுவனத்திடம் இருந்து ஒரு நூறு, 20 லிட்டர் கேன், ஒரு ஐம்பது கேஸ் 300 மிலி வாட்டர் கேன், ஒரு ஐம்பது கேஸ் 500 மிலி வாட்டர் கேன், ஒரு ஐம்பது கேஸ் 1 லிட்டர் வாட்டர் கேன், ஒரு இருபது 2 லிட்டர் கேன் என்று வாங்கு வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யும் போது 20 லிட்டர் கேன் உங்களுக்கு 20 முதல் 25 ரூபாய் வரையில் தருவார்கள், 35 எண்ணம் கொண்ட 300 மிலி தண்ணி கேன் கேஸ் 125 ரூபாய்/ கேஸ் என தர வாய்ப்பு இருக்கிறது. அதே போல 24 எண்ணம் கொண்ட 500 மிலி தண்ணி கேன் கேஸ் 120/ கேஸ் என தர வாய்ப்பு இருக்கிறது. 12 பாட்டில்கள் கொண்ட 1 லிட்டர் கேன் கேஸ் 85 முதல் 90 ரூபாய் வரை தருகிறார்கள். 9 எண்ணம் கொண்ட 2 லிட்டர் தண்ணீர் கேஸ் 160-180 வரை உங்களுக்கு தருகிறார்கள், முதலில் இந்த பிசினஸ்க்கு விசிட்டிங் கார்டு என்பது மிக மிக அவசியம் ஆகிறது.
சரி, முதலில் டெலிவரி எப்படி செய்ய ஆரம்பிப்பது?
இந்த தொழிலுக்கு முதலில் ஒரு டிவிஎஸ் எக்ஸல் அல்லது எலக்ட்ரிக் வண்டி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் டெலிவரியை ஆரம்பித்து படிப்படியாக டெலிவரியை விரிவு படுத்தலாம். உங்களுக்கு 25 ரூபாய்க்கு கேன் வருகிறது என்றால் டெலிவரியோடு சேர்த்து 40 ரூபாய் என விலை நிர்ணயிக்கலாம். ஒரு நாளைக்கு 50 கேன் போட முடிந்தால் கூட இலாபம் மட்டும் ரூபாய் 750 பார்க்கலாம். இன்னொரு முக்கியமான விடயம் புதியதாக டெலிவரி செய்யும் ஒவ்வொரு வீடுகளிடமும் விசிட்டிங் கார்டை கண்டிப்பாக கொடுத்து வந்தால் டெலிவரி இன்னும் அதிகமாக கிடைக்க வாய்ப்புகள் இருக்கும். அபார்ட்மெண்டுகளிடம் காண்டிராக்ட் கேட்டால் இன்னும் கூடுதல் கேன்களை கூட டெலிவரி செய்ய முடியும். இலாபமும் அதிகமாகும்.
சரி, கடைகளுக்கு, வைபவங்களுக்கும் எப்படி டெலிவரி செய்வது?
பொதுவாக 500 மிலி, 1 லிட்டர், 2 லிட்டர் எல்லாம் கடைகளுக்கு தான் அதிகமாக செல்லும், அருகில் இருக்கும் சில்லறை கடைகளுக்கு நேரடியாக சென்று முதலில் கேட்டு, முதல் டெலிவரியை கொடுத்து விட்டு அதற்கப்புறமான காண்டாக்டுகளை மொபைலில் வைத்துக் கொள்ளலாம். ஒரு கேஸ்க்கு கடைக்கு என டெலிவரி செய்யும் போது 25-30 ரூபாய் வரை இலாபம் பார்க்கலாம். பக்கத்தில் இருக்கும் வைபவ மண்டபங்களுக்கு நேரடியாக சென்று அங்கிருக்கும் மண்டப தாரர்களிடம் விசிட்டிங் கார்டுகள் கொடுத்து வைக்கலாம். அவ்வாறாக ஏதாவது வைபவம் புக் ஆகும் போது வைபவங்களுக்கான 300 மிலி கேன் டெலிவரி உங்களுக்கு கிடைக்கலாம்.
ஒரு வைபவத்திற்கு குறைந்த பட்சம் 3000 கேன்கள் வரை எடுப்பார்கள், ஒரு கேனுக்கு குறைந்த பட்சம் 1.5 ரூபாய் இலாபம் வைத்தாலும் ஒரு டெலிவரிக்கு உங்களுக்கு 4,500 இலாபம் கிடைக்கும். இது ஒரு வைபவத்திற்கான இலாபம் மட்டும் தான். சில நாள்களில் ஒரே நாளில் பல வைபவங்கள் கூட வர வாய்ப்புகள் இருக்கிறது. அதிக கேன்கள் எடுக்கும் போது ஒரு சில நிறுவனங்கள், நேரடியாக மண்டபத்திற்கே சென்று கூட கேன்களை இறக்கி வைத்து விடுவார்கள். அதனால் உங்களுக்கு அலைச்சல் ஏதும் இல்லை. எல்லாமே கால்களில் முடிந்து விடும்.
சாதாரண தண்ணீர் கேனில் இவ்வளவு இலாபம் பார்க்க முடியுமா என்றால் நிச்சயமாக முடியும், சரியான திட்டமிடலும், உழைப்பும் இருந்தால் தண்ணீர் டெலிவரி பிசினஸ் உங்களை எஙகையோ கொண்டு செல்லும்