• India
```

வீட்டோடு...ஒரு பெட்டிக்கடை...மாதம் 20,000 முதல் 25,000 வரை இலாபம்!

Petty Business Ideas | Pettikadai Business in Tamil

சரி, பெட்டிக்கடை ஏன்?

பொதுவாக நமது வீட்டைச் சுற்றி இருக்கும் அனைவரும் டவுண்க்கு சென்று பொருள்களை வாங்க மாட்டார்கள், மார்க்கெட்டுக்கு சென்று பொருள்களை வாங்கி வர மாட்டார்கள், தினசரி தேவைக்கு வீட்டு அருகிலேயே ஒரு கடையை தான் எதிர்பார்ப்பார்கள், அந்த வகையில் வீட்டோடு சேர்த்து ஒரு பெட்டிக்கடையை வைத்து விட்டால் சுற்றி இருக்கும் மக்கள் உங்கள் கடைக்கு வந்து தினசரி தேவையான பொருள்களை வாங்கி விட்டுச் செல்வார்கள். அது அவர்களுக்கு மட்டும் வசதி அல்ல, உங்களுக்கும் வசதி, வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டே ஒரு வருமானம்.


சரி, முதலீடு எப்படி?

பெட்டிக் கடையை பொறுத்தவரை குறைந்த முதலீடு போதும், வாரத்திற்கு இரு முறை மொத்த கடைகளுக்கு சென்று சரக்குகளை கடையில் நிரப்புவது அவசியம், கொஞ்சம் காய்கறிகள், கொஞ்சம் மசாலா பொருள்கள், பால், தயிர் என ஒரு குட்டி கடையில் அத்துனையும் இருக்க வேண்டும், ஒரு இரண்டு நாள் மூன்று நாள் விற்கும் அளவிற்கு மட்டும் ஸ்டாக்கை கடைக்குள் வைத்துக் கொள்வது நல்லது.

முதலீட்டைப் பொறுத்தவரை மிக கம்மி தான், பேருராட்சி, மாநகராட்சியில் கடையை ரிஜிஸ்ட்டர் செய்து ஆவணப்படுத்திக் கொள்வது அவசியம், தினம் தினம் ஸ்டாக்கை சரியாக செக் செய்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு எதுவும் இல்லை என்று சொல்லாமல் கொடுத்து வந்தால் வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை தாண்டி மார்க்கெட்டிற்கே செல்ல மாட்டார்கள்.

சரி, இலாபம் எப்படி இருக்கும்?

பெரும்பாலும் வீட்டோடு இருக்கும் பல பெட்டிக் கடைகளை பெண்கள் தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு இது ஒரு வருமான வாய்ப்பாக அமையும், ஆண்கள் வெளியில் வேலைக்கு சென்று வந்து விட்டு கடையில் ஸ்டாக்கை மட்டும் நிரப்பினால் போதும், பெண்கள் கடையை பார்த்துக் கொண்டு வீட்டையும் பார்த்துக் கொள்வார்கள், தினசரி ஒரு 500 ரூபாய் இலாபம் இருந்தாலும் கூட மாதத்திற்கு சிறிய பெட்டிக் கடையின் மூலம் 20,000 ரூபாய் வருமானம் வரும்.


வீட்டோடு கடை என்பதால் வாடகை ஏதும் இல்லை என்பதால் இலாபம் அப்படியே கையில் நிற்கும், வீட்டோடு கடை என்பதால் பெண்கள் கடையை பார்த்துக் கொள்ளும் போது ஆண்கள் வேறு தொழிலுக்கோ வேலைக்கோ சென்று அவர்களும் வீட்டிற்கு வருமான ஈட்ட முடியும்.