Flour Mill Business-பொதுவாக மாவு, மசாலா என்பதெல்லாம் மக்களின் தினசரி சமையலின் ஒரு அங்கம், சரி அதனை நோக்கமாக கொண்டு ஒரு சிறிய மாவு மில் எப்படி வைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
என்ன தான் மாவு பாக்கெட்டுகள் மசாலா பாக்கெட்டுகள் எல்லாம் சந்தைகளில், வந்தாலும் கூட மக்கள் அரைத்து ஒரிஜினலாக மசாலாக்கள் மற்றும் மாவுகள் தயாரிப்பதையே விரும்புகின்றனர், சரி இதை மையமாக ஒரு தொழில் செய்ய வேண்டுமானால் மாவு மில் வைப்பது சரியாக இருக்கும், மாவு மில்லில் நல்ல இலாபம் இருக்குமா என்றால் ஆம் நிச்சயமாக நம்ம இலாபம் இருக்கவே செய்யும்.
சரி, முதலில் மாவு மில் துவங்க என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் என்ன சிறு தொழில் ஆரம்பிக்க நினைத்தாலும் முதலில் அந்த தொழிலை சிறு குறு தொழிலாக பதிவு செய்து கொள்வது அவசியம், பின்னர் மாநகராட்சி அல்லது பேரூராட்சிகளில் கடைக்கான உரிமம் பெற்றுக் கொள்வதும் அவசியம் ஆகிறது, அந்த ஆவணங்களை எல்லாம் வைத்துக் கொண்டு மின் இணைப்பிற்கும் எழுதி கொடுத்து விட வேண்டும், சரி, மெசின்கள், மோட்டார்கள் எல்லாம் எங்கு வாங்குவது என்றால் நேராக கோயம்புத்தூர் ஏறிட வேண்டும், அங்கு தான் மெசின்கள் மொத்த விலையில் கிடைக்கும்.
சாதாரணமாக மாவு, மசாலா அரைக்கும் இயந்திரம் இரண்டும் 30,000 ரூபாய் வரை வரும், மோட்டார் எடுத்துக் கொண்டால் ஒரு 25,000 வரும். மாவுக்கு தனியாக, மசாலாவுக்கு தனியாக என இரண்டு மெசின்களை வாங்கி வைத்துக் கொள்வது அவசியம், நீங்கள் இரண்டு மெசின்களையும் பெல்ட் போட்டு ஓட்ட போகிறீர்கள் என்றால் ஒரே ஒரு மோட்டார் போதுமானதாக இருக்கும்.தனி தனியாக இரண்டு மெசின்களும் ஓட வேண்டுமானால் இரண்டு மோட்டார்களை தனி தனியாக வாங்கி வைத்துக் கொள்வது அவசியமாகிறது.
நனைந்த அரிசிகளை இடிப்பதற்கு தனியாக ஒரு மெசின் வாங்க வேண்டி வரும், அது மோட்டரோடு சேர்த்து ஒரு 27,000 ரூபாய் வரும், நீங்கள் இட்லி மாவும் அரைத்து கொடுக்க முட்படுகிறீர்கள் என்றால் அந்த மெசின் ஒரு 30,000 ரூபாய் வரை வரும் அதையும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மொத்தமாக மெசின்கள், மின் இணைப்பு, ஆவண செலவு என ஒரு நான்கு இலட்சங்கள் கையில் வைத்துக் கொள்வது நல்லது. முதலீடு செய்ய பணம் கையில் இல்லை என்றால் லோனும் வாங்கி கொள்ளலாம்.
சரி, மாவு மில்லில் அப்படி என்ன இலாபம் இருக்கும்?
சராசரியாக ஒரு கிலோ அரைப்பதற்கு 20 ரூபாய் என வைத்துக் கொள்வோம், ஒரு நாள் ஒன்றுக்கு 300 கிலோ அரைமானம் வருகிறது என்றால் ஒரு நாளைக்கு 6,000 ரூபாய் சம்பாதிக்க முடியும் மாதத்திற்கு என எடுத்துக் கொண்டால் 1,80,000 வரை மாவு மில்லில் சம்பாதிக்க முடியும், மின்சார செலவு, பராமரிப்பு செலவு என ஒரு 30,000 ரூபாய் வைத்துக் கொண்டால் கூட கையில் இலாபமாக மாதத்திற்கு 1,50,000 ரூபாய் நிற்கும்.