• India
```

தினசரி ரூ 2500 வரை வருமானம் தரும் சப்பாத்திக்கடை...எப்படி துவங்குவது...?

Chapati Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2024-11-26 17:10:41  |    1477

Chapati Shop Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் சப்பாத்திக் கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Chapati Shop Ideas Tamil - பொதுவாக இட்லி, தோசை என்று தினசரி சாப்பிட்டு கொண்டு இருப்பவர்களுக்கு சற்றே கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயத்தில் சத்தாக சாப்பிட வேண்டும் என நினைப்பவர்கள் சப்பாத்தியை தெரிவு செய்கின்றனர், பெரும்பாலும் சுகர், இதய நோயாளிகள் தினசரி உணவில் சப்பாத்தியை சேர்த்துக் கொள்வது நல்லது என டாக்டர்களே அறிவுறுத்துகின்றனர், அந்த வகையில் சப்பாத்திக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

சரி, அந்த மார்க்கெட்டை தெரிவு செய்து ஒரு தொழிலாக கடையாக எப்படி மாற்றுவது என்பது குறித்து இங்கு பார்க்கலாம், பொதுவாக அடுப்போடு சேர்ந்து இருக்கும் ஒரு நல்ல தள்ளுவண்டி, ஒரு 10 ஸ்டூல்கள், 4 டேபிள்கள் இது போக சமையல் உபகரணங்கள் என ஒட்டு மொத்தமாக ஒரு 50,000 ரூபாய் கையில் இருந்தால் இந்த சப்பாத்தி கடையை இன்றே ஆரம்பித்து விடலாம்.



முதலில் நல்ல இடத்தை தெரிவு செய்ய வேண்டும், மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடம் கச்சிதமாக சப்பாத்தி கடைக்கு பொருந்தும், கடைகளில் சப்பாத்தி ரூ 15 முதல் 20 வரை விற்கப்படுகிறது, நீங்கள் 10 ரூபாய்க்கு விற்றால் கூட 50% இலாபம் இருக்கும், அதனால் முதலில் 10 ரூபாயில் இருந்தே துவங்கலாம், கோதுமை மாவுகளை பொறுத்தவரை 10 கிலோ கவர்களாக மொத்த விலையில் வாங்கி கொள்வது நல்லது.

வருமானத்தை பொறுத்தவரை கவலைப்பட தேவையில்லை, சப்பாத்திக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் காலையும் மாலையும் வைத்தால் தினசரி ரூ 2,500 முதல் 5,000 வரை சம்பாதிக்க முடியும், மாலை மட்டும் வைக்கிறீர்கள் என்றால் ஒரு 2,500 வரை வருமானம் பார்க்கலாம், மாதத்திற்கு ரூ 25,000 முதல் 35,000 வரை இலாபம் மட்டும் தனியாக உங்கல் கைகளில் நிற்கும்.