The Man Company Brand Ambassador -பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா புதிய வணிகங்களில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். அதில், அவர் தி மேன் கம்பெனி என்ற நிறுவனத்தில் முதலீடு செய்து 400 சதவீதம் வரை லாபம் கண்டுள்ளார் தெரிய வந்துள்ளது.
தி மேன் கம்பெனி என்பது ஆண்களுக்கான ஒரு பிரீமியம் பிராண்ட் ஆகும். ஆண்களுக்கான உடல் சீவனப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், தலைமுடி பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்கிறது. இமானி லிமிடெட் நிறுவனம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தி மேன் கம்பெனியை வாங்கியுள்ளது.
இதன் மூலம் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு அவருடைய முதலீட்டில் சுமார் 400 சதவீத லாபம் கிடைத்துள்ளது. ஆயுஷ்மான் குரானாவுக்கு நடிப்பு மட்டுமல்லாமல், புதிய தொழில்களில் முதலீடு செய்வதிலும் ஆர்வம் உள்ளது. அந்த வகையில், 2018ஆம் ஆண்டில் அவர் தி மேன் கம்பெனி நிறுவனத்தில் முதலீடு செய்தார். குறிப்பாக, இந்தியாவில் ஆண்களுக்கான பிரீமியம் வகை அழகு சாதனப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் தி மேன் கம்பெனி உருவானது.
The Man Company Owner -இந்த நிறுவனம் எதிர்பார்த்ததை விட அதிக வளர்ச்சி கண்டது. இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆயுஷ்மான் குரானா கணிசமான தொகையை முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததுடன், நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் அவர் இருந்தார். அவரது விளம்பரங்கள் மேன் கம்பெனி நிறுவனத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்த நிலையில், மேன் கம்பெனி நிறுவனத்தின் நோக்கம் ஆரம்பத்திலேயே தெளிவாக புரிந்தது என்றும், நிச்சயமாக இந்த நிறுவனம் வெற்றி பெறும் என்பதை உணர்ந்து அதில் இணைந்ததாகவும் ஆயுஷ்மான் குரானா தெரிவித்தார். ஒரு முதலீட்டாளராக மட்டுமின்றி, இதன் விளம்பர தூதராகவும் செயல்பட்டதில் பல்வேறு அனுபவங்கள் கிடைத்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மேன் கம்பெனி நிறுவனத்தின் நிறுவனர் ஹித்தேஷ் தினரா, ஆயுஷ்மான் குரானா தங்களுடைய நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்த பிறகு பெரிய அளவில் நம்பிக்கை கிடைத்ததாகவும், தங்களுடைய நிறுவனம் பொருட்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்ததில் ஆயுஷ்மான் குரானா முக்கிய பங்கு வகித்தார் என்றும் தெரிவித்தார்.
மேலும், தி மேன் கம்பெனி நிறுவனத்தின் வளர்ச்சியையும், இந்தியாவில் ஆண்களுக்கான பிரீமியம் பொருட்களுக்கான தேவை இருப்பதையும் உணர்ந்த இமாமி லிமிடெட் நிறுவனம் தி மேன் கம்பெனி நிறுவனத்தை வாங்கியுள்ளது. கடந்த 2024ஆம் நிதியாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 185 கோடி ரூபாய் வரை வருமானமாக ஈட்டியுள்ளது தெரியவந்தது. இந்த நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் இகாமர்ஸ் தளங்கள் மூலமே கிடைத்தது எனத் தெரிகிறது.