Rabbit Farming Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் முயல் வளர்ப்பில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Rabbit Farming Ideas Tamil - பொதுவாக முயல் என்பது கறிவகைகளுக்கும், செல்லப்பிராணியாக வளர்ப்பதற்கும் வாங்குகின்றனர், பெரிதாக சேட்டை ஏதும் செய்யாத விலங்கினம் என்பதால் முயலை வாங்க அனைவரும் ஆர்வம் கொள்கின்றனர், முயல் கறி என்பது இரத்த ஓட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சத்தான ஆகாரம் ஆக கருதப்படுகிறது, இரும்புச்சத்து, வைட்டமின் B12, வைட்டமின் B, நியாசின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் மிகுந்தது.
பொதுவாக முயல் வளர்க்கும் போது அதை யூனிட்களாக பிரித்து வளர்க்க வேண்டும், ஒரு யூனிட் என்பது 7 பெண் முயல்களும், 3 ஆண் முயல்களும் அடங்கியதாக இருக்கும், ஒரு 10 யூனிட் வளர்க்கிறீர்கள் என்றால் அதற்கு தனியாக 10 கூண்டுகள், அதற்கான ஒரு கூடார அமைப்பு, அமைதியான இடம் உள்ளிட்டவைகளை எல்லாம் முதலாவதாகவே தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
பொதுவாக ஒரு யூனிட்கான மொத்த செலவு என்பது 15,000 ரூபாய் வரை ஆகலாம், 10 யூனிட் என்னும் போது 1,50,000 ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கும், மொத்தமாக ஒரு இரண்டு இலட்சம் என வைத்துக் கொள்ளுங்கள், உணவுகளை பொறுத்தவரை அருகம்புல், கோரைப்புல், வேப்பிலை, காய்கறி இலை தழைகள், முடிந்தால் மாட்டு தீவனங்களும் கொடுக்கலாம்.
ஒரு முயல் 6 முதல் 8 குட்டிகள் வரை போடும், ஒரு யூனிட்டுக்கு மொத்தம் 30 முயல் குட்டிகள் என்றால் கூட 10 யூனிட்டுக்கு 300 குட்டிகள், வளர்ப்பது பெரிதல்ல சந்தைப்படுத்துவது தான் மிக முக்கியம், கறிக்காக ரூ 400, வளர்ப்புக்காக ரூ 250 வரை சந்தைகளில் விற்கப்படுகிறது, உங்கள் விற்பனை சமநிலையாக இருக்கும் பட்சத்தில் முயல் வளர்ப்பை பார்ட் டைமாக செய்தால் கூட மாதம் ரூ 50,000 வருமானம் ஈட்ட முடியும்.