• India
```

சாணம் பொடி தயாரிப்பு...குறைந்த முதலீட்டில்...மாதம் ரூ 25000 வரை வருமானம்...!

Cow Dung Powder Making Business

By Ramesh

Published on:  2025-01-13 13:20:46  |    523

Cow Dung Powder Making Business - பொதுவாக அந்த காலக்கட்டத்தில் காலையில் முற்றம் தொளிக்கும் போது, தினமும் வீட்டின் முன் சாணி தெளித்து கோலம் போடுவது தான் வழக்கம், ஆனால் தற்போது அந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது, வீட்டின் முன் சாணி தெளிப்பது என்பது வீட்டிற்கே ஒரு கிருமி நாசினி போல, கேடு விளைவிக்கும் எந்த நுண்ணுயிர்களும் வீட்டிற்குள் வர விடாமல் சாணம் ஒரு கிருமிநாசினியாக செயல்படும்,

அது மட்டும் அல்லாது வீட்டின் முன் சாணம் தெளித்து இருந்தால் பாம்பு போன்ற விஷமுள்ள ஜந்துகள் வீட்டிற்குள் வராது, சரி இந்த காலக்கட்டத்தில் அதெல்லாம் சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியம் இல்லை தான், காரணம் நகரங்களில் மாடுகளை பார்ப்பதே அரிது தான், அந்த வகையில் அவர்களையும் போய் சாணம் சேர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சாணம் பவுடர்,



சரி இதை எப்படி தயாரிக்க வேண்டும், முதலில் மாடு வைத்து இருப்பவர்களிடம் நேரடியாக சாணத்தை வாரம் ஒரு முறை கொள்முதல் செய்து கொள்ள வேண்டும், பொதுவாக ஒரு டிராக்டர் சாணம் ரூ 1000 என்று கிராமங்களில் கொள்முதல் செய்வார்கள், சாணத்தை தட்டி நன்கு வெயிலில் வறட்டியாக உலர்த்தி, மண் போல ஆக்கி கொள்ள வேண்டும், அதை பொடியாக இடிக்கலாம், அல்லது மெசின்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

கோவை, ஈரோடு பகுதிகளில் சாணங்களை அரைக்கும் மெசின்கள் கொஞ்சம் மலிவான விலையில் கிடைக்கும், பொதுவாக சந்தைகளில் ஒரு பாக்கெட் 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்படுகிறது, நீங்கள் மொத்த விலைக்கு 7 ரூபாய் 50 காசுக்கு கொடுக்கலாம், உங்களுடைய அசல் என்பது கவர் பேக்கிங் எல்லாம் சேர்த்து 2 ரூபாய் 50 காசு தான், ஒரு பாக்கெட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாமல் கிடைக்கும்.

" மாதத்திற்கு ஒரு 5000 முதல் 7000 பாக்கெட்டுகள் சந்தைப்படுத்தினால் சராசரியாக 25,000 முதல் 45,000 ரூபாய் வரை வருமானம் பார்க்க முடியும் "