Cloud Kitchen Business Model - நாகரீக காலத்தில் உணவு முறைகள், உணவுகள், உணவு தொழில்கள் என அனைத்துமே மாற்றம் கண்டு வருகிறது, முதலில் ஹோட்டல் என்றால் இட்லி, தோசை, சாப்பாடு மட்டும் தான், ஆனால் தற்போது பரோட்டோ, சைனீஸ் வகைகள், கடல் உணவுகள், ப்ரைடு ரைஸ்கள் என உணவு முறை மாறிக் கொண்டே இருக்கிறது, உணவு தொழில்களும் மாறிக் கொண்டே இருக்கிறது.
ஒரு காலத்தில் அனைவருமே வீட்டில் சமைத்து தான் சாப்பிட்டார்கள், பின்னர் ஹோட்டல் என்று ஒரு தொழில் பிறந்தது, பின்னர் வீட்டிற்கே டெலிவரி, தற்போது Cloud Kitchen என உணவு தொழில்களும் படிப்படியாக மாற்றம் கண்டு வருகின்றன, சரி Cloud கிச்சனா என்ன, அதுனால என்ன பயன், அது மூலமா எப்படி வருமானம் பார்க்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்,
ஹோட்டல்களில் இருக்கும் சமையல் அறை மட்டும் தனியாக பிரிந்து அப்படியே ஒரு தொழில் உருவானால் அது தான் Cloud Kitchen, இதை வீட்டிலேயே, வீட்டு மாடிகளிலேயே கூட செயல்படுத்த முடியும், வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவை வீட்டில் இருந்தே அதாவது இந்த Cloud Kitchen மூலம் சமைத்து கொடுக்க முடியும், Swiggy, Zomato உள்ளிட்ட டெலிவரி பார்ட்னர்கள் மூலம் டெலிவரியும் செய்யலாம்.
தனியாக இடம் தேவை இல்லை என்பதால், வாடகை, எலக்ட்ரிக் செலவு, ஏசி செலவுகள், பராமரிப்பு செலவுகள் எல்லாம் மிச்சம், பொதுவாக Cloud Kitchen யில் ஹோட்டல்கள் போல அல்லாமல், வாடிக்கையாளர்கள் இங்கு Prefered உணவை தெரிவு செய்து கொள்ள முடியும், ஹோட்டல்களை விட இங்கு முதலீடுகள் கம்மி, வீட்டிலேயே ஆரம்பிக்கும் பட்சத்தில் வேலையாட்களையும் கம்மி செய்து கொள்ளலாம்.
" உணவின் தரம், சுவை, மார்க்கெட்டிங், டெலிவரி செய்ய டிஜிட்டல் பிளாட்பார்ம்கள் என அனைத்தும் சரியாக அமைந்து விட்டால் ஹோட்டல்கள் தரும் இலாபத்தை விட இரண்டு மடங்கு இலாபத்தை Cloud Kitchen தரும் என்பதில் ஐயமில்லை "