கொரோன காலகட்டத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட வணிகங்களை ஆதரிப்பதற்காக முதன்முதலில் 2020 -ல் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா (PM Svanidhi Yojana) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் ஆதார் அட்டை வைத்து கடன் பெற முடியும். ஆரம்பத்தில் ரூபாய் 10,000 கடன் கொடுக்கப்படும். அதை சரியாக திருப்பி கொடுத்தால் அடுத்த முறை ரூ.20,000 பெறலாம். 12 மாதத்திற்குள் கடனை தவணை முறையில் கொடுக்க வேண்டும்.
PM ஸ்வாநிதி யோஜனா-வில் எப்படி விண்ணப்பிப்பது?
பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வர்த்தகம் செய்யும் சிறிய விற்பனையாளர்கள், பிஎம் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் எளிதில் கடன் பெற அரசு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் தேவையாகும். கீழே படிப்படியாக விண்ணப்பிக்கும் வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன:
1. கடன் விண்ணப்பப் படிவத்தை (LAF) தயார் செய்யுங்கள்
விண்ணப்பத்திற்கு தேவையான அடிப்படை தகவல்களை சரியாக நிரப்பி, தேவையான ஆதார ஆவணங்களை சேர்க்கவும்.
2. மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்கவும்
விண்ணப்பத்தின் போது e-KYC/Aadhaar சான்றீடு செய்யப்படவேண்டும். இதற்கு, ஆதார் அட்டைக்கு இணைந்த மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.
3. பரிந்துரைக் கடிதம் பெறவும்
உங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலிருந்து (ULB) அரசு நலத் திட்டங்களுக்கான பரிந்துரைக் கடிதத்தை பெற்றுக் கொள்ளவும்.
4. தகுதி நிலையை சரிபார்க்கவும்
இந்த திட்டத்திற்கு நான்கு வகை விற்பனையாளர்கள் தகுதி பெறுகிறார்கள். உங்கள் விற்பனை தொழிலை அதன் அடிப்படையில் சரிபார்க்கவும்.
5. விண்ணப்பம் சமர்ப்பிக்கவும்
விண்ணப்பத்தை அரசு போர்ட்டல்களில் நேரடியாக சமர்ப்பிக்கலாம் அல்லது அருகிலுள்ள பொதுச் சேவை மையம் (CSC) மூலமாக விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: இந்த படிகளை சரியாக பின்பற்றினால், கடன் பெற செயல்முறை எளிதாக இருக்கும்.