இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். குறிப்பாக, யூடியூப் தளத்தில் அவர் உருவாக்கியுள்ள சேனல், உலகளவில் அதிகபட்ச சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட ஒரே அரசியல் தலைவராக மாற்றி வைத்துள்ளது.
மோடியின் யூடியூப் சேனல் விவரங்கள்:
சப்ஸ்க்ரைபர்கள்: 26.5 மில்லியன் (2.6 கோடி)
அப்லோட் செய்யப்பட்ட வீடியோக்கள்: 29,272
மொத்த பார்வைகள்: 6.36 பில்லியன் (63 கோடி பார்வைகள்)
பிரதமர் மோடி உலகளவில் 2 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கொண்ட ஒரே அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், அவரது சேனலில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் பெரும்பாலானவை 40,000 பார்வைகளை கடந்துள்ளன. இதன் மூலம், மோடியின் யூடியூப் சேனல் மாதம் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
மாதாந்திர வருமானம் எவ்வளவு?
சமூக வலைதளங்களில் வீடியோக்கள் மூலம் விளம்பர வருமானம் வருவது குறிப்பிடத்தக்கது. vidIQ தரவுகளின்படி, பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் மாதத்திற்கு 1,62,49,520.70 ரூபாயிலிருந்து 4,87,47,697.38 ரூபாய் வரை வருமானம் பெறுகிறது.
சமூக வலைதளங்களில் பிரதமரின் ஆதரவு:
பேஸ்புக்: 48 மில்லியன் (4.8 கோடி) பின்தொடர்பவர்கள்
இன்ஸ்டாகிராம்: 82.7 மில்லியன் (8.27 கோடி) பின்தொடர்பவர்கள்
இவை மட்டுமின்றி, பிரதமர் மோடியின் யூடியூப் சேனலில் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 19 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.