• India
```

சுக்கு காபி சுண்டல் கடை...தினசரி 3 மணி நேரம் போதும்...கையில் 1500 ரூபாய் வரை வருமானம்...!

Sukku Cofee Sundal Shop Ideas

By Ramesh

Published on:  2024-12-05 16:18:28  |    11357

Sukku Cofee Sundal Shop Ideas - தமிழகத்தின் பிரபலமான மற்றும் பாரம்பரியமான மூலிகை பானம் ஆக சுக்கு காபி அறியப்படுகிறது, அந்த காலக்கட்டத்தில் மன்னர்களின் பல அரசவைகளின் அலுப்பு பானம் ஆக சுக்கு காபி இருந்திருப்பதாக தகவல், சுக்கு, மல்லி, கருப்பட்டி உள்ளிட்டவைகளை ஒன்றாக சேர்த்து காய்ச்சப்படும் சுக்கு காபி வெறும் பானம் மட்டும் அல்ல, அது பல்வேறு மருத்துவ குணங்களும் மிகுந்தது.

இது போக பயறு வகைகளும் புரதங்கள், நார்ச்சத்துகள், மாங்கனீசு மற்றும் பல வைட்டமின்களை உள்ளடக்கியது, பெரும்பாலும் சாயங்கால வேளைகளில் வடை, பஜ்ஜி, டீ போன்றவற்றை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக ஒரு சுக்கு காபி, ஏதாவது ஒரு பயறு வகையை பண்டமாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிக மிக அது நன்மையை பயக்க கூடியதாக இருக்கும்.



சுக்கு காபி கடை வைப்பதற்கு பெரிதாக முதலீடு ஏதும் தேவைப்படாது, ஒரு தள்ளு வண்டி, நல்ல மார்க்கெட் பகுதியில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும், சுக்கு காபி ரெடி செய்து விட்டு அதை ஒரு கரி அடுப்பில் எப்போதும் கரி தங்கலில் சூடாக இருக்கும் படி போட்டு வைத்துக் கொள்ள வேண்டும், பாசி பயறு, கானம், சுண்டல் இந்த மூன்று பயறு வகைகளை அவித்து தாலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக கருப்பட்டி சுக்கு காபி என்பது 110 மிலி 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது, விலை அதிகரித்து விற்றாலும் கூட வெள்ளை சீனி சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள், பயறு வகைகளும் 20 ரூபாய்க்கே பலரும் விற்கிறார்கள், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு 40 வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து பருகி சென்றாலும் கூட கையில் ஒரு 1200 ரூபாய் முதல் 1500 வரை வருமானம் வந்து நிற்கும்