• India
```

ஓம வாட்டர் தொழில்…சிறிய முதலீடு…மாதம் ரூ 30000 முதல் 60000 வரை இலாபம்…!

Omam Water Business Ideas

By Ramesh

Published on:  2024-12-12 22:31:36  |    6343

Omam Water Business Ideas - ஓம வாட்டர் தயாரிப்பு என்பது ஒரு சிறிய குடிசைத் தொழில் தான், ஆனால் அதையே பெரிய அளவில் சந்தைப்படுத்தி, இலட்சங்களில் இலாபம் பார்ப்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள், பொதுவாக ஓம வாட்டர் என்பது செரிமானம், வயிற்று வலி, கல்லீரல் டாக்ஸின்கள் நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளின் எளிதான தீர்விற்காக பயனர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

முதலில் ஓம வாட்டர் தயாரிப்பதற்கு நீர் தான் முதல் ஆதாரம், சுத்தீகரிக்கப்பட்ட 20 லிட்டர் கேன்களை மொத்த விலைக்கு நேரடியாக கம்பெனிக்கே சென்று கொள்முதல் செய்தால் ரூ 7 முதல் 10 ரூபாய்க்கே வாங்கி விடலாம், பொதுவாக ஓம வாட்டரை பொறுத்தமட்டில் 200 மிலி அல்லது 300 மிலி கேன்கள் தான் அதிகமாக ஓடும். அது தான் விற்பனைக்கும் சிறந்ததாக இருக்கும்.



அந்த வகையில் ஒரு 20 லிட்டர்  தண்ணீர் கேனை எடுத்துக் கொண்டால் 100 பாட்டில் வரை ஓம வாட்டர்கள் செய்யலாம், ஒரு 200 மிலி பிளாஸ்டிக் பாட்டில் சந்தையில் மொத்த விலையில் ரூ 2.50, 100 பாட்டில்கள் என்றால் 250 ரூபாய் ஆகும், தேவையான வறுத்த ஓமம் ஒரு 50 கிராம், அது ஒரு 50 ரூபாய், 20 லிட்டர் தண்ணீர் ஒரு 10 ரூபாய் என வைத்துக் கொண்டால் இங்கு 20 லிட்டர் ஓம வாட்டர் தயாரிப்பிற்கு மொத்த முதலீடு என்பது ஒரு 310 ரூபாய் ஆகிறது.

ஒரு 200 மிலி ஓம வாட்டர் கேன் மொத்த விலைக்கு 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது, அந்த வகையில் 20 லிட்டர் அதாவது 100 கேன் என்பது 800 ரூபாய், ஒரு நாளைக்கு 20 லிட்டர் ஓட்டினாலே ரூ 490 தனியாக இலாபம் மட்டும் கையில் நிற்கும், நிறைய மொத்த கடைகளை கையில் வைத்துக் கொண்டு, ரீட்டைலையும் பார்த்தால் ஒரு நாளைக்கு 500 கேன்கள் வரையிலும் கூட டெலிவரி செய்யலாம்.

“ அந்த வகையில் முழு மூச்சோடு இத்தொழிலில் களம் இறங்கினால் சராசரியாக பார்த்தால் கூட, மாதத்திற்கு இலாபம் மட்டும் தனியாக ரூ 30,000 முதல் 60,000 வரை பார்க்கலாம் “