• India
```

தினசரி ரூ 20,000 வரை வருமானம்...நல்ல இலாபம் தரும் லாரி சர்வீஸ் தொழில்...!

Lorry Transport Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-11-15 23:25:03  |    10505

Lorry Transport Business Ideas Tamil - பொதுவாக வணிகர்களாலோ அல்லது பொது மக்களாலோ டவுணில் ஏதாவது பொருள்களை வாங்கி விட்டு தங்களால் கொண்டு வர முடியாத பட்சத்தில், பெரிய பொருட்களையோ அல்லது எடை மிகுந்த பொருள்களையோ செட்களில் போட்டு விட்டு முகவரியை எழுதி கொடுத்தி விடுவர், அடுத்த நாட்களில் அந்த பொருள் நமது வீடுகளுக்கோ, கடைக்கோ வந்து நிற்கும்.

பொதுவாக லாரிசர்வீஸ் வைக்க குறைந்தபட்சம் ஒரு இரண்டு லாரிகள் இருக்க வேண்டும், இரண்டு பெரு நகரங்களை சுற்றிய மொத்த கிராமங்களையும் கவர் செய்யும் வகையில் இருக்க வேண்டும், தற்போது நீங்கள் தூத்துக்குடியில் இருக்கிறீர்கள் என்றால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என இரண்டு பெரு நகரங்களுக்கு இடையில் உங்களது லாரி ட்ரான்ஸ்போர்ட் இருக்க வேண்டும்.



இரண்டு நகரங்களிலும் ஒரு ஆபிஸ் இருக்க வேண்டும், இரண்டு ஆபிஸ்களிலும் ஒரு லாரி நிற்க வேண்டும், இரண்டு ஆபிஸ்களிலும் இரண்டு தள்ளு வண்டிகள் இருக்க வேண்டும், ஏணிகள், பேக்கிங் கவர்கள், போராக்கள், முகவரிக்கு அட்ரஸ் கவர்கள், இரண்டு ஆபிஸ்களிலும் பில்லிங் கம்ப்யூட்டர்கள் என எல்லாம் இருக்க வேண்டியது அவசியம், ஆபிஸ்களை மாநகராட்சிகளில் ஆவணப்படுத்தி லைசென்ஸ்சும் எடுத்துக் கொள்வது அவசியம்.

முதலீட்டை பொறுத்தவரை குறைந்த பட்சம் ஒரு 1.5 கோடி கையில் இருக்க வேண்டும், தொழிலில் நீங்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அதை ஒரு 3 வருடத்திலேயே இலாபமாக ரிட்டன் பெற முடியும், ஒரு நாளைக்கு இரண்டு லாரிகளிலும் ஒரு நூறு, நூறு பார்சல்கள் சென்றால் கூட ஒரு பார்சலுக்கு ரூ 100 என வைத்துக் கொண்டால் நாள் ஒன்றுக்கே உங்களால் ரூ 20,000 வரை வருமானம் பார்க்க முடியும்,