• India

தின்பண்டங்கள் பேக்கிங்...கம்மியான முதலீட்டில்...மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Snacks Packing Business Ideas

By Ramesh

Published on:  2025-01-08 20:48:49  |    6689

Snacks Packing Business Ideas - பொதுவாக சாதாரண கடைகளில் நாம் சென்றதும் கண்ணில் பட்டதும் வாங்கும் தின்பண்டங்கள் 7 ரூபாய், 10 ரூபாய் மதிப்புள்ள தின்பண்டங்களாக தான் இருக்கும், 1/4 கிலோ, 1/2 கிலோ பாக்கெட்டுக்கள் இருந்தாலும் கூட ஒரு காபியோ, ஒரு டீயோ குடிக்க எளிதாக வாங்க கூடிய வகையில் இருப்பது இந்த 7 ரூபாய், 10 ரூபாய் பேக்கிங் தின்பண்டங்கள் தான்.

அந்த வகையில் தின்பண்டங்களை மொத்த விலைக்கு வாங்கி அதை 7 ரூபாய், 10 ரூபாய் பேக்கிங்களாக போட்டு அதை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், முதலில் நீங்கள் குடிசைத் தொழில் போல ஆரம்பிக்கிறீர்கள் என்றால் ப்ரிண்டிங் கவர் இல்லாமல் சாதாரண PP கவரில் பேக்கிங் செய்யலாம். 7 ரூ பாக்கெட்டுகள் என்றால் 30 கிராம், 10 ரூ பாக்கெட்டுகள் என்றால் 50 கிராம்.



இந்த கணக்கின் படி தான் பேக்கிங் செய்ய வேண்டும், மொத்த பேக்கேஜ்களில் 7 ரூபாய் பாக்கெட்டுகள் என்றால் 20 பாக்கெட்டுகள் வைக்க வேண்டும், 10 ரூபாய் பாக்கெட்டுகள் என்றால் 10 பாக்கெட்டுகள் வைக்க வேண்டும், நீங்கள் சேவு, மிக்சர், சீவல், காரா பூந்தி போன்ற தின்பண்டங்களை மொத்த விலை கடைகளில் அல்லது தயாரிப்பு மையங்களில் கிலோ 110 ரூ முதல் 120 ரூ என வாங்கி கொள்ளலாம்.

7 ரூபாய் தின்பண்ட பாக்கெட், அதாவது 20 பாக்கெட் உள்ள தொகுப்பு மொத்த விலைக்கு நீங்கள் 115 ரூ அல்லது 120 ரூபாய்க்கு கொடுக்கலாம், 10 ரூபாய் தின்பண்ட பாக்கெட், அதாவது 10 பாக்கெட் உள்ள தொகுப்பு ரூ 90 க்கு மொத்த விலையில் கொடுக்கலாம், ஒரு நாள் ஒன்றுக்கு மொத்த கடைகளுக்கு ரீட்டைல் கடைகளுக்கும் என சேர்ந்து ஒரு 20 கிலோ சந்தைப்படுத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.

" 20 கிலோ தின்பண்டங்களின் அசல் ரூ 2400 ரூபாய், அதை 5 ரூபா பாக்கெட்டுகளாக போட்டால் 33 கவர் வரும், அந்த 33 கவரையும் ஒரு நாளில் நீங்கள் சந்தைப்படுத்தினால், 3960 ரூபாய் மொத்த வருமானம், அதில் இலாபம் சராசரியாக 1500 ரூபாய் வரும், எப்படி பார்த்தாலும் இத்தொழிலில் சராசரியாக மாதம் 30000 ரூபாய் கையில் இலாபமாக நிற்கும் "