தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு நாளுக்கு நாள் பல்வேறு துறைகளில் வளர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. மனிதர்கள் செய்யும் பல்வேறு வேலைகளை ஏஐ செய்வதால் வேலை வாய்ப்பு குறைகிறது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.
இப்போது மனிதர்கள் செய்ய முடியாத விஷயங்களை கூட ஏஐ செய்ய தொடங்கி இருக்கிறது. ஆம்,டெத் கிளாக் என்ற ஏஐ மனிதர்கள் இறக்கும் தேதியை கூட கணிக்கிறதாம்.
ஜூலை மாதம் வெளிவந்த இந்த செயலி மூலம் தற்போது வரை 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்களது இறப்பு தேதியை தெரிந்துள்ளனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாய் மாறி இருக்கிறது. மரண தேதியை மட்டுமில்லாமல், மரணத்தை தள்ளிபோடுவதற்கான பரிந்துரைகளையும் வழங்குவதாக கூறப்படுகிறது.
டெத் கிளாக் என்ற ஏஐ பயன்படுத்த வேண்டும் என்றால் பிறந்த தேதி, பாலினம், எடை, உயரம், உணவுப்பழக்கம், இனம், வாழும் இடம், தூங்கும் நேரம், உடற்பயிற்சி, புகை புடிப்பீர்களா போன்றவற்றை தெரிவிக்க வேண்டும், மேலும் மன அழுத்தத்தை குறைக்க சொல்லி அறிவுறுத்தும் என்று சொல்லப்படுகிறது