• India

ஆம்னி பஸ் சர்வீஸ் ஆரம்பிக்கலாமா..என்ன வழிகள்..இலாபம் எப்படி இருக்கும்..?

Omni Bus Transport Ideas Tamil

By Ramesh

Published on:  2024-10-16 12:33:02  |    11760

Omni Bus Transport Ideas Tamil - ஆம்னி பஸ் சர்வீஸ் தொழிலில் இருக்கும் முதலீடுகள், இலாபங்கள் குறித்து பார்க்கலாம்.

சரி, முதலில் முதலீடு எவ்வளவு...?

உதாரணத்திற்கு நீங்கள் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயக்க இருக்கிறீர்கள் என்றால் குறைந்த பட்சம் உங்களிடம் இரண்டு பஸ் இருக்க வேண்டும், பெரும்பாலும் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரையிலோ அல்லது சென்னையில் இருந்து திருநெல்வேலி வரையிலோ இயக்கப்படும் பேருந்துகள் சாயங்காலம் மற்றும் இரவுகளிலேயே இயக்கப்படுகின்றனர். 

அப்படி பார்க்கும் போது, ஒரு பஸ் திருநெல்வேலியில் இருந்து சென்னை கிளம்பும் போது, அதே நேரத்தில் இன்னொரு பஸ் சென்னையில் இருந்து திருநெல்வேலி கிளம்ப வேண்டும். இரண்டு பஸ்களை வாங்கி நீங்கள் அதை ஸ்லீப்பர் வித் AC ஆக ரெடி செய்ய வேண்டும் எனில், பஸ், பாடி பில்டிங் எல்லாம் சேர்த்து ஒரு ஒன்றரை கோடி ஆகலாம், கையில் ஒரு 40 இலட்சம் தனியாக இருப்பதும் அவசியம்.

உங்களிடம் நல்ல பிசினஸ் மாடல் இருக்கும் பட்சத்தில் வங்கிகளிடம் 90 சதவிகிதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம், நீங்கள் ஒரு அசோக் லேலாண்ட் ஆம்னி பஸ் வாங்கிறீர்கள் என்றால் அந்த நிறுவனத்திலேயே ரிஜிஸ்ட்ரேசன் ஏஜெண்டுகள் இருப்பார்கள், அவர்கள் மூலம் நீங்கள் வேறு எங்கும் அலையாமல் ஒரு குறிப்பிட்ட கமிசன் மட்டும் கொடுத்து செய்து கொள்ள முடியும், அவர்கள் ஒரு 50,000 முதல் 60,000 வரை கேட்க வாய்ப்புகள் இருக்கிறது.


நீங்கள் வண்டியை தமிழகத்தில் தான் இயக்க இருக்கிறீர்கள் என்றால் 90 நாளுக்கு ஒரு முறை 1,50,000 வீதம் சாலை வரி கட்ட வேண்டி இருக்கும். இவைகள் தான் ஒரு பஸ்சை இயக்குவதற்காக முதலீடுகள். அதாவது எல்லாம் சேர்த்து குறைந்த பட்சம் உங்களிடம் மூன்று கோடி முதலீடு இருந்தால் ஆம்னி பஸ்சை எந்த தடையும் இன்றி ஒரு மூன்று மாதத்தில் சாலையில் இறக்கி விட முடியும்.

பஸ்சை பொறுத்தவரை ஒரு பயணி எதிர்பார்க்கும் அத்துனை வசதிகளும் இருக்க வேண்டியது அவசியம், தனியாக ஒரு சார்ஜிங் போர்ட், மெத்தை வசதி, பேக் வைப்பதற்கு தனி இடம், தனியாக ஒரு லைட் வசதி, ஸ்க்ரீன், முடிந்தால் பஸ்சுக்கு உள்ளாகவே ஒரு ரெஸ்ட் ரூம் உள்ளிட்ட அனைத்தும் இருக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் உங்கள் பஸ்சை தேடி தேடி புக் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

பெர்மிசன் ஏதும் வாங்க வேண்டுமா?

ஆம் கண்டிப்பாக வாங்க வேண்டும் காண்டிராக்ட் கேரியேஜ் பெர்மிசன் (CCP) என்ற வகையில் ஒரு பெர்மிசன் வாங்க வேண்டும். நீங்கள் பஸ் வாங்கும் இடத்தில் இருக்கும் ஏஜெண்டின் மூலமாகவே இந்த பெர்மிசனையும் பெற்றுக் கொள்ள முடியும், இன்ஸூரன்ஸ், CCP, சாலை வரி என இந்த மூன்றுமே அந்த ஏஜெண்டுகள் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும். மற்றபடி RTO எல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.


சரி இலாபம் எவ்வளவு இருக்கும்?

ஆம்னி பேருந்தை பொறுத்தவரை ஒரு லிட்டர் டீசலுக்கு 4 கி.மீ வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. திருநெல்வேலி முதல் சென்னை 650 கி.மீ என்னும் போது ஒரு ட்ரிப்பிற்கு குறைந்த பட்சம் 165 லிட்டர் வரை டீசல் போட வேண்டும். ஒரு லிட்டர் டீசல் 93.2 என்னும் போது, டீசலுக்கு மட்டும் கிட்ட தட்ட 15,500 என வைத்துக் கொள்வோம், டிரைவர் மற்றும் க்ளீனருக்கான பேட்டா ஒரு 2,000 என வைத்துக்கொள்வோம், தேய்மான செலவு ஒரு ஆயிரம் வைத்துக் கொள்வோம், 

ஒரு பஸ் ஒரு நடை அடிக்க 18,500 செலவு ஆகிறது, ஒரு ஸ்லீப்பரின் விலை 900 என வைத்துக் கொண்டால், ஒரு பஸ் 36 ஸ்லீப்பர்களை கொண்டு இருக்கும், அதில் ஒரு 4 ஸ்லீப்பரை எடுத்து விட்டு 32 பதிவாகுகிறது என வைத்துக் கொண்டால் 28,800 ஒரு பஸ்சில் மட்டும் சம்பாதிக்க முடியும், இரண்டு பஸ் என்னும் போது 57,600 சம்பாதிக்க முடியும், டீசல், பேட்டா, தேய்மானம் உள்ளிட்ட செலவுகள் போக நாள் ஒன்றுக்கு 20,600 இலாபம் மட்டும் தனியாக நிற்கும், மாதத்திற்கு 6 இலட்சம் இலாபம் மட்டும் தனியாக நிற்கும்.

நீங்கள் பதிவான பார்சல் சர்வீஸ் இறக்குகிறீர்கள் என்றால் அதன் மூலம் ஒரு 60,000 தனியாக இலாபம் வரும், ஆபிஸ் செலவு, சர்வீஸ் செலவு, சம்பளம் என அனைத்தையும் கழித்தால் கூட குறைந்த பட்சம் மாதத்திற்கு உங்களால் 5,50,000 வரை இலாபம் பார்க்க முடியும், நீங்கள் உங்கள் பஸ்சை சரியாக கவனிக்கும் போது, உங்கள் வாடிக்கையாளர்களை சரியாக கவனிக்கும் போது, எந்த ஒரு விழா பெசிட்டிவலுக்கும் விலை ஏற்றாமல் பஸ்சை ஓட்டும் போது தினசரி 36 ஸ்லீப்பர்களும் கூட முழுமையாக பதிவாகும்.