• India

நல்ல இலாபம் தரும் வகையில் ஃபிரைடு ரைஸ் கடை வைப்பது எப்படி?

Fried Rice Business Ideas | Own Business Ideas in Tamil

By Dharani S

Published on:  2024-09-28 16:38:18  |    6174

முதலில் ஃபிரைடு ரைஸ் கடை வைப்பது எப்படி?

முதலில் நல்ல தெளிவான ஒரு இடத்தை தேடி கண்டு பிடிக்க வேண்டும், இடம் அமையும் பட்சத்தில், ஃபிரைடு ரைஸ் கடையை பொருத்த மட்டில், கேஸ் கனெக்சனுடன் கூடிய ஒரு தள்ளு வண்டி அவசியமாகிறது, நல்ல லைட்டிங் வசதியுடன் அந்த தள்ளு வண்டி இருக்கும் போது, கடையை பார்க்கும் போதே ஒரு பிரம்மிப்பு இருக்கும், வாடிக்கையாளர்கள் கடையை பார்த்ததுமே கடையை நோக்கி வர தோன்றும், தோற்றம் தானே முதலில் எல்லாம், சரி வாடிக்கையாளர்களை இழுத்தாயிற்று அதற்கு அடுத்தபடியாக என்ன செய்யலாம். 

நிறைய வெரைட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும், உதாரணத்திற்கு காளான் சூப், மசால் காளான், பானி பூரி, மசால் பூரி, சிக்கன் ஃப்ரைடு ரைஸ், வெஜ் ஃபிரைடு ரைஸ், எக் ஃப்ரைடு ரைஸ், காளான் ஃப்ரைடு ரைஸ், முட்டை காளான் என பல விதங்களை வைப்பது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். அஜினோ மோட்டோ உபயோகிக்காமல் சுவைக்காக வேறு எதுவும் சேர்க்காமல் இருப்பது நல்லது. முடிந்தால் அஜினோ மோட்டோ உபயோகிப்பதில்லை என ஒரு போர்டும் வைப்பது நல்லது.


சமீப காலமாக மக்களிடன் சுவைக்காக சேர்க்கப்படும் கெமிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது, ஏதாவது ஒரு கடையில் அஜினோ மோட்டோ சேர்ப்பதில்லை என விளம்பரம் போட்டு இருந்தால் அந்த கடையின் தினசரி வாடிக்கையாளர்கள் ஆகி விடுகிறார்கள். அது போக ரைஸ்சில் சேர்க்கப்படும் ஃசாஸ் வகைகளை வீட்டிலேயே செய்தால் நல்லது, கடைகளில் வாங்கப்படும் ஃசாஸ்களில் அதிக கெமிக்கல் இருப்பதால் பலருக்கும் அது உடல் நலத்திற்கு ஒத்துக் கொள்வதில்லை.

பாபநாசம் போகும் வழியில் ஜித்து என்ற பெயரில் ஒரு தள்ளு வண்டி பிரைடு ரைஸ் கடை இருக்கும், அங்கு ப்ரைடு ரைஸ்க்கு தேவையான தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் என அனைத்தையும் அவர்களே தயாரிக்கிறார்கள், அஜினோ மோட்டோ சேர்க்காமல் ப்ரைடு ரைஸ் போடுகிறார்கள், இந்த விடயத்திற்காகவே சுற்றி இருக்கும் அத்துனை பெரிய பெரிய ஹோட்டல்களை எல்லாம் விட்டு விட்டு, மக்கள் குவிந்து இந்த ஜித்து கடையில் உணவை வாங்கி விட்டு செல்கிறார்கள், அதாவது மக்கள் நலனில் நாம் ஏதாவது மெனக்கெடுகிறோம் என்றால், மக்களும் நாம் உயர மெனக்கெடுவார்கள்.



ப்ரைடு ரைஸ் கடையை பொறுத்தவரை மக்களை இழுக்க தெரிந்து விட்டால் போதும், இலாபம் தன்னால் கையில் வந்து விடும், அதற்கு சுவையும், தரமும், கெடுதல் இல்லா பண்டமும் போதும், இதை மட்டும் செய்தாலே தினசரி 6 மணி நேரத்தில், ரூபாய் இரண்டாயிரம் அல்லது அதற்கு மேலும் கூட உங்கள் கைகளில் இலாபம் நிற்கும்