How To Start a Cake Business From Home - பொதுவாக கேக் செய்வது என்பது பெண்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக பார்க்கப்படுகிறது, பெரும்பாலும் வீட்டில் இருப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டுப்பெண்கள் செய்து கொடுத்து விரும்பி உண்டு மகிழ்வர், அந்த வகையில் கேக் செய்வதை வீட்டில் இருந்து கொண்டு, ஒரு தொழிலாக செய்து, நல்ல இலாபம் பார்ப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக கேக் செய்வதற்கும், டிசைனிங் செய்வதற்கு என்றும் நிறைய டூல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன, முதலாவதாக அதை முழுவதும் வாங்கிக் கொள்ள வேண்டும். மொத்தமாகவே ஒரு ரூ 2,000 வரை வரும், பெரிய கேக்குகள் எல்லாம் செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றவாறு ஓவன் வாங்க வேண்டும், கமெர்சியல் ஓவன்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன.
மொத்தமாக கேக்குகளுக்கான மூலப்பொருள்கள், டூல்கள், குட்டி குட்டி மெசினரிகள் என எல்லாம் சேர்த்து ஒரு 70,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய் வரை ஆகலாம், இது போக கேக் டிசைன் என்பது உங்கள் மூளை போடும் மூல தனம், பண மூலதனத்தை காட்டிலும், உங்கள் மூளை போடும் மூல தனம் தான் இந்த தொழிலில் நீங்கள் வெற்றி அடைய முக்கிய மூலதனமாக இருக்கும்.
Home Business Ideas in Tamil -வீட்டில் இருந்தே செய்யும் போது ஒரு ஆன்லைன் பேஜ், இன்ஸ்டா மற்றும் பேஸ்புக்குகளில் துவங்கி கொள்ள வேண்டும், டெலிவரி செய்வதற்கான சரியான அமைப்புகள் இருக்க வேண்டும், பேக்கிங் கவர்கள் முதல் கேக் வரை அனைத்திலும் குட்டி குட்டி பிரம்மாண்டங்கள் இருக்க வேண்டும், நார்மல், ப்ரீமியம் என கேக்கின் விலைகளை மார்க்கெட்டுகளுக்கு ஏற்றவாறு நிர்ணயித்திட வேண்டும்.
பீஸ் கேக்குகளும் செய்து விற்கலாம், டெலிவரி செய்யலாம், விழாக்காலங்களில் பீஸ் கேக்குகள் தான் அதிகமாக ஓடும், பீஸ் கேக்குகள், குட்டி குட்டியாக குறைந்த விலையில் பிறந்தநாள் கேக்குகள், ஒரே ஒரு துண்டில் பிறந்தநாள் கேக்குகள் என பல வகையாக கேக்குகளை செய்ய வேண்டும், நீங்கள் எந்த அளவிற்கு உங்களது இன்னோவேசனை கேக்குகளில் காட்டுகிறீர்களோ அந்த அளவிற்கு விற்பனை இருக்கும்.
" கிலோ 550 ரூபாய் முதல் 2,000 வரை கேக்குகளின் டிசைன்களை பொறுத்து விலை நிர்ணயிக்கலாம், இலாபத்தை பொறுத்தவரை ஒரு கேக்கிற்கு 30 முதல் 40% வரை இலாபம் இருக்கும், மாதத்திற்கு ஒரு 30 கேக்குகள் டெலிவரி செய்தால் கூட வீட்டில் இருந்தே சராசரியாக ரூ 25,000 முதல் 35,000 வரை வருமானம் பார்க்க முடியும் "