• India

துளசி மாலை விற்பனை...எந்த முதலீடும் இல்லாமல்...மாதம் ரூ 12000 வரை வருமானம்...!

Thulasi Selling Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-11 11:25:30  |    258

Thulasi Selling Ideas Tamil - துளசி என்பது பொதுவாக மருத்துவ குணம் மிகுந்த மூலிகை செடி, பொதுவாக துளசி செடியை வீடுகளில் தெய்வீக செடியாக வளர்ப்பர், அது போக  கடவுள்களுக்கு மாலையாக அணிவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவிப்பது உண்டு, அது மட்டும் அல்லாமல் பெருமாள் கோவிலில் பிரசாதத்தோடு துளசி கொடுப்பதும் அவசியம்,

சரி பொதுவாகவே இந்த துளசி என்பது காடுகளில், கோவில்களில், வெட்ட வெளிகளில் சாதாரணமாக பார்க்க முடியும், ஒரு செடியை உங்கள் வீட்டில் எடுத்தோ, மாடியில் தொட்டி அமைத்தோ வளர்த்தால் காடு போல வளர்ந்து விடும், சரி இந்த துளசியின் மூலம் முதலீடே இல்லாமல் எப்படி மாதம் ஓரளவிற்கு வருமானம் பார்ப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



துளசியை வெட்டி ஒரு நூலில் மாலை போல கோர்த்து தினமும் ஒரு 20 முதல் 30 மாலைகளை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள், அதை உங்கள் ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு பெருமாள் கோவிலின் முன்பு நடை திறக்கும் முன்னதாக காலை ஒரு இரண்டு மணி நேரம், மாலை ஒரு இரண்டு மணி நேரம் சிறிய ஸ்டால் அமைத்து விற்றால் தினசரி ஒரு 30 மாலைகள் ஆவது விற்க முடியும்.

ஒரு மாலை ரூ 15 ரூபாய் என வைத்துக் கொண்டால் கூட நாள் ஒன்றுக்கு ரூ 450 ரூபாய் வரை முதலீடே இல்லாமல் வருமானம் பார்க்க முடியும், திருவிழா நாட்களின் ஒரு நாளைக்கு 100 துளசி மாலைகள் கூட ஓடும், எப்படிப்பார்த்தாலும் சராசரியாக மாதத்திற்கு ரூ 12,000 வரை வருமானம் ஈட்டி விட முடியும், முதலீடே போடாமால் ஏதாவது தொழில் பார்க்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த ஐடியாவாக அமையும்.