Egg Shop Business Ideas Tamil - பொதுவாக தமிழகத்தை பொறுத்த வரை முட்டை என்றாலே நாமக்கல் தான், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் முட்டை விலை என்பது நாமக்கல் மார்க்கெட்டை பொறுத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது, கிட்ட தட்ட தினசரி 6 கோடி முட்டைகள் நாமக்கலில் உற்பத்தி செய்யப்படுகிறது, தினசரி 4 கோடி முட்டைகளுக்கும் மேல் நாமக்கலில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்றுமதி ஆகிறது.
நீங்கள் மொத்த முட்டை கடை வைக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் செல்ல வேண்டியது நாமக்கல் தான், நேரடியாக நாமக்கல் சென்று மொத்த டீலர்களை அணுகி விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும், சந்தையில் 6 ரூபாய்க்கு விற்கிறார்கள் என்றால் உங்களுக்கு மொத்த விலையில் 4 ரூபாய்க்கு கிடைக்கும், உடைமானம், டெலிவரி என செலவு சேர்த்து உங்களுக்கு ஒரு முட்டையின் அசல் விலை 4.20 ரூபாய் ஆகும்.
மொத்த முட்டை கடை வைப்பதற்கு கடையின் அளவு 10*15 கடை இருந்தாலே போதும். முதலில் ஒரு 1000 தட்டு கொள்முதல் செய்யலாம், பிளாஸ்டிக் முட்டை ட்ரேக்கள் ஒரு 4000 தட்டு வாங்கி வைத்துக் கொள வேண்டும், அட்டை அல்லது தெர்மோகோல் முட்டை ட்ரேக்கள் கொஞ்சம் வாங்கிக் கொள்ள வேண்டும், சுட்லி கயிறு ஒரு 4 எண்ணம், கடையை உணவு பாதுகாப்பு துறையில் ரிஜிஸ்டர் செய்து, பஞ்சாயத்து அல்லது மாநகராட்சியில் ஆவணப்பதிவு செய்து லைசென்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கொள்முதல், முட்டை ட்ரேக்கள், கடைக்கான செலவு, ஆவண செலவு என கையில் முதலீடாக ஒரு 2.50 இலட்சங்கள் இருக்க வேண்டும், இலாபத்தை பொறுத்தவரை 30 முட்டை உள்ள ஒரு ட்ரேவை மொத்த விலைக்கு (4.80 ரூ) விற்றால் ரூ 24 கிடைக்கும், சில்லறை விலைக்கு (5.50 ரூ) விற்றால் ஒரு ட்ரேவிற்கு 39 ரூபாய் கிடைக்கும், ஒரு நாளைக்கு 75 தட்டுகள் மொத்தமாக 25 தட்டுகள் சில்லறையாக விற்கிறீர்கள் என்றால் நாள் ஒன்றுக்கு மட்டும் ஒரு 2,325 ரூபாய் இலாபம் மட்டும் தனியாக நிற்கும். மாதத்திற்கு 60,000 ரூபாய் அசலைச் சேர்க்காமல் இலாபம் மட்டுமே கையில் இருக்கும்.