• India
```

பிரியாணி இலை வளர்ப்பு...மாடி மட்டும் இருந்தால் போதும்...வீட்டில் இருந்தே ரூ 10000 வரை வருமானம் பார்க்கலாம்...!

Biryani Leaf Farming Ideas Tamil

By Ramesh

Published on:  2025-01-04 16:36:28  |    17280

Biryani Leaf Farming Ideas Tamil - நல்ல வருமானம் தரும் வகையில் வீட்டில் இருந்தே பிரியாணி இலை வளர்ப்பில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Biryani Leaf Farming Ideas Tamil - இந்தியாவின் விருப்ப உணவுகளில் ஒன்றாக அறியப்படுகிறது பிரியாணி, அதற்கு பல்வேறு மூலப்பொருட்கள் இருந்தாலும் கூட, பிரியாணி இலை எனப்படும் ரம்பா இலை மிக முக்கிய மூலப்பொருள்களாக பார்க்கப்படுகிறது, அந்த இலையின் வாசமே பிரியாணி வாசத்தில் இருக்கும், ஹோட்டல்களிலும் வீட்டில்களிலுமே பிரியாணி செய்யும் போது பிரியாணி இலை பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில் வீட்டில் இருந்தால் ரம்பா இலை பயிரிட்டு அதை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம், பொதுவாகவே பெண்களுக்கு செடி வளரிப்பில் நல்ல ஆர்வம் இருக்கும், அவர்கள் வளர்க்கும் ரோஸ் செடிகளோடு இதையும் சேர்த்து வளர்க்கும் பட்சத்தில் ஏதோ கையில் கொஞ்சம் வருமானம் வரும், பிரியாணி இலை செடியின் சிறிய தண்டுகள் பல இடங்களில் விற்கப்படுகின்றன.



ஒரு 50 தண்டுகள் வேரோடு வாங்கி மாடி முழுவது தொட்டி வைத்து நட்டி விட வேண்டும், காலை ஒரு முறை மாலை ஒரு முறை என இருமுறை தண்ணீர் தெளிக்க வேண்டும், கிட்டதட்ட ஒரு 45 நாட்களிலேயே நிறைய இலை விட ஆரம்பிக்கும், ஒரு 50 நாளில் இலையை வெட்டி சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம், தினமும் உங்கள் வீடுகளில் உருவாகும் காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.

பொதுவாக வாரத்திற்கு இரு முறை என பிரியாணி இலையை வெட்டி ஹோட்டல்கள் மற்றும் அருகில் இருக்கும் காய்கறி கடைகளுக்கும் சந்தைப்படுத்தலாம், கூறு கூறாக விற்றால் ஒரு கூறில் 5 இலை போல வைத்து 10 ரூபாய்க்கு கொடுக்க முடியும், கிலோவாக கொடுக்கும் போது சந்தைகளில் கிலோ 110 முதல் 150 ரூபாய்க்கு வரை விற்கப்படுகிறது, அதே விலைக்கு கொடுக்கலாம்.

" இவ்வாறாக ஹோட்டல்கள், வீடுகள், காய்கறி கடைகள் என வாரம் இருமுறை பிரியாணி இலையை சந்தைப்படுத்தும் போது பெரிய முதலீடும், பெரிய உழைப்பு ஏதும் இல்லாமலே மாதம் ரூ 8000 முதல் 10000 வரை வருமானம் பார்க்கலாம் "