• India
```

பசும்பால் கடை...தினசரி மூன்று மணி நேரம் போதும்...மாதம் 15000 வரை வருமானம்...!

Pasum Paal Kadai Ideas

By Ramesh

Published on:  2024-12-16 19:03:40  |    10067

Pasum Paal Kadai Ideas - தொழிலோ, வேலையோ கொஞ்சம் வாழ்க்கைக்கு ஏற்றவாறு வருமானம் கொடுத்தாலும் கூட, சைடில் ஏதாவது ஒரு குட்டி வருமானம் வந்தால் நன்றாக இருக்கும் என அனைவருக்குமே தோன்றும், வருமானத்திற்கு ஏற்ப செலவுகளும் சரியாக இருப்பதால் யாருமே இங்கு சேமிப்பு என்று தனியாக எடுத்து வைப்பதில்லை, சேமிப்பு என்று வேண்டும் என்றால் நிச்சயம் சைடில் ஏதாவது வருமானம் வர வேண்டியது அவசியம் ஆக இருக்கிறது.

அந்த வகையில் ஒரு குட்டி வருமானம் தரும் காய்ச்சிய பசும்பால் கடை எப்படி வைப்பது என்பது குறித்து பார்க்கலாம், இந்த கடையை வைக்க பெரிய தொழில் அனுபவம் எல்லாம் தேவை இல்லை, கறவை மாடு வைத்து இருப்பவரை தினசரி பால் ஊத்தச் சொன்னால் போதும், பொதுவாக காய்ச்சிய பசும்பால் கடை என்பது சாயங்கால நேரங்களில் ரத வீதிகளில் நிறைய பார்க்கலாம், 



பனங்கற்கண்டு பால், மிளகு பால், பாதாம் பால் என பால்களில் நிறைய வெரைட்டிகள் வைத்து இருப்பார்கள், மிளகு பால் என்றால் அவர்களே மிளகும், மஞ்சளும் அரைத்து தனியாக கலவையாக வைத்து இருப்பார்கள், பாதாம் பால் என்றால் பாதாமும், மஞ்சளும் அரைத்து தனியாக கலவையாக வைத்து இருப்பார்கள், வேறு கடைகளில் கிடைக்கும் பொடிகளை பயன்படுத்த மாட்டார்கள்.

ஒரு பனங்கற்கண்டு பால், மிளகு பால் விலை 20 ரூபாய் வரை விற்பார்கள், பாதாம் பாலின் விலை ரூ 25 வரை விற்பார்கள், நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு 30 முதல் 50 பேர் கடைக்கு வந்து பருகி சென்றால் கூட மாதம் ஒரு 15,000 ரூபாய் வரை வருமானம் பார்க்கலாம், மாலை ஒரு 5 மணிக்கு துவங்கி 8 மணிக்கு பெரும்பாலும் கடை முடிந்து விடும், கிட்டத்தட்ட இது ஒரு சைடு பிசினஸ் தான், காலையில் நீங்கள் வேறு ஏதும் வேலையோ தொழிலோ செய்து கொள்ளலாம்.