• India
```

கார்பரேட் ஷாப்களால், மொத்த கடைகளும், சில்லறை கடைகளும் அழியும் அபாயம்!

Wholesale Departmental Store | Retail Challenges 2024

By Dharani S

Published on:  2024-09-23 15:54:55  |    261

Wholesale Departmental Store - கார்பரேட் நிறுவனங்கள் இன்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறது, அத்தியாவசிய மார்க்கெட்டுகளிலும் தற்போது நுழைந்து இருப்பதால் மொத்த கடைகளும் சில்லறை கடைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன

பொதுவாக ஒரு கார்பரேட் நிறுவனம் ஏதாவது ஒரு துறையில் வளர்ச்சியைக் கண்டு விட்டால், அதில் வரும் இலாபத்தை தொடர்ந்து பல துறைகளில் முதலீடு செய்யும். அவ்வாறாக இன்று பல கார்பரேட் நிறுவனங்கள், மக்களின் அத்தியாவசிய மார்க்கெட்டுகளிலும் நுழைந்து, மொத்த கடைகளுக்கும், சில்லறை கடைகளுக்கும் ஆட்டம் காட்டி வருகின்றன. பொதுவாக மொத்த கடைகள் என்பவை சில்லறை கடைகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யும், சில்லறை கடைகள் அந்த பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும். ஆனால் தற்போது அத்தியாவசிய மார்க்கெட்டுகளுக்குள் நுழைந்து இருக்கும் கார்பரேட் நிறுவனங்கள், சில்லறை கடைகளுக்கும் மொத்த விலைக்கு பொருள்களை கொடுக்கிறது, அதே சமயத்தில் சில்லறை கடைகளில் வாங்கி கொண்டு இருந்த மக்களுக்கும் சில்லறை கடைகள் கொடுக்கின்ற விலையை விட கம்மியாக கொடுக்கிறது.


இவ்வாறாக இருக்கும் போது மொத்த கடைகளும், சில்லறை கடைகளும் மொத்தமாக அழியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக ஒரு அத்தியாவசிய பொருளை அதை தயாரிப்பவர்கள், அதிகமாக யார் வாங்குறார்களோ அவர்களுக்கே அந்த பொருளை கம்மியான விலைக்கு கொடுப்பார்கள். அப்படியாக தான் இந்த கார்பரேட் நிறுவனங்கள் நேரடியாக பொருள்களை தயாரிக்கும் கம்பெனிகளிடமே பேசி பொருளை எவ்வளவு மலிவாக வாங்க முடியுமோ, அவ்வளவு மலிவாக வாங்குகிறார்கள், அதே கம்பெனிகள் தங்கள் பொருள்களை சில்லறை கடைகளுக்கு, மொத்த கடைகளுக்கும் கொடுக்கும் போது கார்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த விலையில் கொடுப்பதில்லை. சற்றே விலை ஏற்றி தான் கொடுப்பார்கள். இதனால் தான் சில்லறை கடைகளும், மொத்த கடைகளும், கார்பரேட் நிறுவனங்களுடன் போட்டி போட முடியவில்லை

இப்படியே போனால் நாளை ஒட்டு மொத்த அத்தியாவசிய பொருள்களும் கார்பரேட் கைகளில் தான் இருக்கும், நாளை அவர்கள் வைத்தது தான் விலையாகவும் இருக்கும், குறைந்த பட்சம் சில்லறை கடை ஊழியர்களையும் மக்கள் சப்போர்ட் செய்வதே உகந்ததாக இருக்கும்