• India
```

நாள் ஒன்றுக்கு ரூ 3000 வரை வருமானம்..நல்ல இலாபம் தரும் வல்கனைசிங் ஷாப்..!

Vulcanizing Shop Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-11-04 06:43:24  |    583

Vulcanizing Shop Business Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் வல்கனைசிங் ஷாப் வைப்பது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vulcanizing Shop Business Ideas Tamil -  வல்கனைசிங் என்பது பைக்குகள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களின் டயர்களுக்கு பஞ்சர், டயர் மாற்றம், ட்யூப்கள் மாற்றம், ஏர் பில்லிங் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் ஒரு கடை அல்லது நிறுவனம் ஆகும், பொதுவாக வல்கனைசிங் ஷாப் வைத்திருப்பவர்கள் கடைகளிலும் வல்கனைசிங் செயல்பாடுகளில் ஈடுபடுவர், அதே சமயத்தில் யாரேனும் கால் செய்து கூப்பிடும் பட்சத்தில் நேரடியாக சென்றும் செயல்பாடுகளில் ஈடுபடுவர்.

இரண்டு முறைகளிலும் வேலைகள் செய்திடும் பட்சத்தில் கொஞ்சம் வருமானம் அதிகம் பெற முடியும், நகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு கடை, கொஞ்சம், மெசினரிகள், ஜாக்கிகள், குறைந்தபட்சம் 220 லிட்டர் கெபாசிட்டி கொண்ட ஒரு கம்ப்ரஸ்சர் என உங்களது வல்கனைசிங் ஷாப்பிற்கு தேவையான அனைத்து பொருள்களையும் லிஸ்ட் இட்டு வாங்கி கொள்ளவும், கரூர், கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரி பகுதிகளில் உங்கள் வல்கனைசிங் ஷாப்பிற்கு தேவையான அனைத்துமே கிடைக்கும்,



சரி, முதலீடு எவ்வளவு இருக்கும்?

முதலீட்டை பொறுத்தவரை குறைந்தபட்சம் ஆவணங்கள், மெசினரிகள், கம்ப்ரஸ்சர், டூல்ஸ்கள் என எல்லாம் சேர்த்து ஒரு இரண்டரை இலட்சங்கள் வரை ஆகலாம், ஒரே ஒரு முதலீடு தான், அதற்கு பின்னர் பெரிதாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய அவசியங்கள் இருக்காது, அவ்வப்போது சந்தைகளில் வரும் அட்வான்ஸ்டு டூல்ஸ்கள், மெசினரிகள் வாங்குவது மட்டுமே முதலீட்டிற்கு பின்னரான செலவு, ஒரு 60 எண்ணம் 35 * 20 செமீ விளம்பர போர்டுகள் அடித்து வைத்துக் கொள்ள வேண்டும்,

நான்கு திசைகளிலும் ஒரு 5 கி.மீ தூரத்திற்கு ஆங்காங்கே அந்த விளம்பர போர்டுகளை மெயின் ரோடுகளில் இருக்கும் போஸ்ட்களிலோ மரங்களிலோ தொங்க விட்டு விட வேண்டும், ரோடுகளில் ஏதாவது வாகனம் பஞ்சர் ஆகி நிற்கும் போது அந்த விளம்பரத்தை பயன்படுத்தி உங்களை தொடர்பு கொள்ள அது வாய்ப்பாக அமையும், பெரிய வாகனங்களின் டயர்களை கலட்டுவதற்கும் மாட்டுவதற்கும், வெளி செயல்பாடுகளுக்கும் உதவிகரமாக குறைந்தபட்சம் ஒன்றிரண்டு வேலையாள் உடன் இருப்பது அவசியம்,



சரி, இலாபம் எப்படி இருக்கும்?

பொதுவாக பைக்குகளை கையாள்வதற்கு ரூ 80 முதல் ரூ 150 வரை வசூலிக்கிறார்கள், வெளி செயல்பாடுகளுக்கு ரூ 100 முதல் ரூ 170 வரை வசூலிக்கிறார்கள், கார், லாரி மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ 350 முதல் ரூ 600 வரை வசூலிக்கிறார்கள், வெளி செயல்பாடுகளுக்கு ரூ 400 முதல் ரூ 650 வரை வசூலிக்கிறார்கள், பெரும்பாலும் அனைத்து வல்கனைசிங் ஷாப்களிலும் இது தான் விலைப்பட்டியலாக இருக்கிறது, நீங்கள் இதில் ஒரு சராசரி விலையை எடுத்துக் கொள்ளலாம்.

நாள் ஒன்றுக்கு ஒரு 7 பைக்குகள், 5 வாகனங்கள், 2 வெளி செயல்பாடுகள் என்று வைத்தாலும் கூட குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ரூ 3000 வரை சம்பாதிக்க முடியும், மாதத்திற்கு என்று கணக்கு வைத்தால் ரூ 80,000 முதல் 1,20,000 வரை சம்பாதிக்கலாம், ஒன் டைம் முதலீடு என்பதால் ஷாப் வைத்த பின்னர் உங்களுக்கு கிடைக்கும் அத்துனை வருமானமுமே இலாபம் தான், மெசினரிகள், டூல்ஸ்களின் தேய்மானம் வேண்டுமானால் ஒரு 5 சதவிகிதம் போகலாம் அவ்வளவு தான்.