• India
```

நல்ல இலாபம் தரும் வகையில்...காய்கறி கடை வைப்பது எப்படி...?

Vegetable Shop Business Ideas Tamil

By Ramesh

Published on:  2024-10-24 04:15:40  |    1408

Vegetable Shop Business Ideas Tamil - கார்களோ பைக்குகளோ யாராவது இங்கு ஒரு சிலரின் வீட்டில் தான் அத்தியாவசியமாக இருக்கும், ஆனால் காய்கறிகள் என்று எடுத்துக் கொண்டால் டாப் டு பாட்டம் என இங்கு அத்துனை பேருக்கும் அத்தியாவசியம் தான், அந்த வகையில் ஒரு காய்கறி கடையை நல்ல இலாபகரமான முறையில் எப்படி உருவாக்குவது, முதலீடுகள் என்ன என்பது குறித்து இங்கு முழுமையாக பார்க்கலாம்.

சரி, காய்கறி கடை வைப்பதற்கான முதலீடு என்ன, எப்படி வைப்பது?

முதலில் கடை அது ஏதாவது மார்க்கெட் பக்கத்தில் இருப்பது மிக மிக அவசியம், கடையை மாநகராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் பதிவு செய்து ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும், பெரிய அளவில் சந்தைப்படுத்த  போகிறீர்கள் என்றால் தமிழக உணவு பாதுகாப்பு துறையிடமும் லைசென்ஸ் வாங்கி கொள்வது அவசியம், காய்கறிகளை வேளாண் விவசாயிகளிடம் நேரடி கொள்முதலும் செய்யலாம், இல்லையேல் மொத்த மார்க்கெட்டுகளில் ஏலம் எடுக்கலாம், அல்லது மொத்த மார்க்கெட்டுகளில் தேவையான அளவிற்கு கொள்முதல் செய்து கொள்ளலாம்.


முதலீடு என்பது கொஞ்சம் கடைக்காக ஒரு 50,000 ரூபாய் தேவைப்படும், சரக்குகளை இறக்க ஒரு 50,000 ரூபாய், மொத்தமாக ஒரு ஒரு இலட்சம் இருந்தால் ஒரு பிரம்மாண்டமான காய்கறிகடைய ஓபன் செய்து விடலாம், எதுவும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் போது வாடிக்கையாளர்கள் கடையை தேடி வருவார்கள், அழுவல் காய்கறிகளை அவ்வப்போது கழித்து விடுவது நல்லது, அது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை முகம் சுழிக்க வைக்கலாம், ஃப்ரஷ் ஆன காய்கறிகள், நாணயமான விலை இந்த இரண்டும் இருக்கும் பட்சத்தில் உங்கள் கடைகளில் கூட்டம் அலைமோதுவதை யாராகும் தடுக்க முடியாது.

சரி, இலாபம் எப்படி இருக்கும்?

பொதுவாக காய்கறி கடைகளில் அழுவல்கள் நிறைய வரும் இலாபம் இருக்காது என சொல்வார்கள், ஆனால் அப்படி இல்லை அழுவல்களை தினசரி கழித்து காய்கறிகளை முறையாக கையாளும் போது கழிவுகள் குறையும், குறைந்த பட்சம் உங்கள் வருமானத்தில் கழிவுகள் சென்றால் கூட வருமானத்தில் ஒரு 45 சதவிகிதம் இலாபம் இருக்கும், ஒரு சிறிய கடையில் நாள் ஒன்றுக்கு ரூ 7000 வருமானம் வரும் பட்சத்தில் அதில் இலாபம் மட்டுமே தனியாக ரூ 3,300 வரை இருக்கும். மாதத்திற்கு ரூ 90,000 முதல் 1,00,000 வரை இலாபம் மட்டும் தனியாக கையில் நிற்கும்.