Vadai Kadai Business Ideas Tamil - தினசரி நான்கு மணி நேரம் மட்டும் உழைத்து ரூ 2000 வரை வருமானம் தரும் வடை கடை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Vadai Kadai Business Ideas Tamil - ஒரு தள்ளு வண்டி, மார்க்கெட் அருகில் ஒரு இடம், ஒரு கமெர்சியல் சிலிண்டர், தினசரி பலசரக்கு சாமான்கள் மொத்தமாக ஒரு 12,000 ரூபாய் முதலீடு இருந்தாலே போதும் கடையை துவங்கி விடலாம், கடை நிச்சயம் ஏதாவது சந்தை பகுதிகளில் அல்லது நல்ல மக்கள் கூடும் இடங்களில் இருக்க வேண்டியது மிக மிக அவசியம், ஒரு மாலை 3 மணிக்கு கடை ஆரம்பித்து 7 மணிக்கு முற்றிலும் முடிந்து விடும் வகையில் இருத்தல் வேண்டும்.
அதற்கு மேல் சரக்கு ஏதும் போட கூடாது, கிட்டதட்ட நான்கு மணி நேரம் தான், அது தான் ஒரு வடை கடையை இயக்குவதற்கான சரியான நேரமும் கூட, பொதுவாக தற்போது வடை, பஜ்ஜி, சம்சா எல்லாம் சந்தைகளில் 10 ரூ முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது, நீங்கள் சட்னியுடன் ஒரு 8 ரூபாய் நிர்ணயிக்கலாம், போட போட விற்கும் வகையில் சுட சுடவும், அதே சமயத்தில் சுவையாகவும் செய்வது அவசியம்.
நீங்கள் வடையை சுவையாக சுட சுட சட்னியுடன் விநியோகம் செய்யும் போது ஒரு நாளைக்கே 300 முதல் 400 வடை வரை கடைகளில் ஓடும், சில நேரங்களில் வடை ஆர்டர்கள் கூட வரலாம், நல்ல காரத்துடன் சட்னி வைத்து வடையோ, பஜ்ஜியோ சாப்பிடுவது தற்போது கிட்டதட்ட அது ஒரு ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகவே மாறி விட்டது, கூடவே கேன் டீ கூட வைத்து விற்கலாம், அது உங்கள் வசதியை பொறுத்தது.
வடை கடையை பொறுத்தவரை வடையோடு சேர்ந்து ஒரு 4 மணி நேரம் வெந்தால், நாள் ஒன்றுக்கு ஒரு 350 வடை விற்றால் கூட ரூ 2,800 வரை வருமானம் பார்க்க முடியும், அதில் இலாபம் என்று கணக்கில் கொண்டால் தினசரி ஒரு ரூ 1,200 வரை கையில் நிற்கும், வெறும் 4 மணி நேரம் மட்டுமே உழைத்து மாதம் ரூ 32,000 வரை கையில் இலாபமாக சேர்க்கலாம், இது முதலீடு போக தனியாக இலாபம் மட்டும் தான்.