Vaazhai Thaar Yelam Kadai - வாழைத்தார் ஏலக்கமிஷன் மண்டி, பொதுவாக வாழை விவசாயிகள் வெட்டிய வாழைத்தாரை அந்த கிராமத்திற்குள்ளேயே சந்தைப்படுத்துவது என்பது கடினமாக இருக்கும், விற்பனை ஆகுமோ, ஆகாதோ என யோசித்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும், அவர்களுக்கான உரித்த விலையை, விற்பனையை கிடைக்க செய்வது தான் இந்த வாழைத்தார் ஏலக்கமிஷன் மண்டி.
முதலில் இந்த ஏலக்கமிஷன் மண்டி என்பது நல்ல மார்க்கெட் பகுதியில் வண்டிகள் விடுவதற்கு சுலபமான இடத்தில், பரந்து விரிந்த அமைப்பில் இருக்க வேண்டும், விவசாயிகள் வெட்டிய வாழைத்தாரை ஏலத்திற்காக மண்டிக்கு வந்து போட்டு விடுவர், அந்த வாழைத்தார் அதை வந்து போட்ட விவசாயின் பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு மாலை நேரங்களில் ஏலம் விடப்படும்.
பொதுவாக சாயங்கால நேரம் ஏலம் நடக்கும், பழக்கடைகள், கடைகள் வைத்து இருப்பவர்களும், விழா காலங்களுக்கு தார் வேண்டும் என நினைப்பவர்களும் வந்து ஏலம் கேட்பார்கள், தார் ஏலம் போன தொகையில் ஒரு 10% ஏலக்கமிஷன் மண்டிக்கு வந்து சேரும், இது போக ஊத்தம் போட்டுக் கொடுத்தால் எக்ஸ்ட்ரா தாருக்கு ஒரு 5 முதல் 10 ரூபாய் வரை வசூலிக்கலாம்.
தினமும் ஒரு 100 தார் வருகிறது என வைத்துக் கொண்டால் கூட தாருக்கு ரூ 10 - 15 வரை கமிஷன் கிடைக்கும், அந்த வகையில் தினசரி ரூ 1000 முதல் 1500 வரை வருமானம் பார்க்கலாம், மாதம் என்று பார்க்கும் போது சராசரியாக ரூ 30,000 வரை வருமானம் பார்க்க முடியும், பண்டிகை மற்றும் முகூர்த்த காலங்களில் கொஞ்சம் அதிகமாக தார் ஓடும், அந்த சமயங்களில் அதிக கமிஷன் கிடைக்கும்.