• India
```

நல்ல இலாபம் தரும் வகையில்...குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள் கடை வைப்பது எப்படி...?

Toy Shop Business Ideas

By Ramesh

Published on:  2024-12-07 17:10:42  |    632

Toy Shop Business Ideas - குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்களை கொள்முதல் செய்து நல்ல இலாபம் தரும் வகையில் ஒரு கடையாக எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Toy Shop Business Ideas - என்ன தான் குழந்தைகள் இன்று மொபைலில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தாலும் அவர்களும் விளையாட்டு சாமான்கள் மீதி அலாதி பிரியம் எப்போதும் இருக்கும், கையில் போனை வைத்து விளையாடிக் கொண்டு இருக்கும் ஒரு குழந்தையிடம் விளையாட்டு சாமான்களை வாங்கிக் கொடுத்தால் போனை கீழே வைத்து விட்டு அதை வைத்து விளையாட ஆரம்பித்து விடும்.

பெரும்பாலான குழந்தைகள் மொபைல் பார்த்து பார்த்து சிறு வயதிலேயே கண் பார்வை மங்கல்களை எதிர்கொள்வதால் பெற்றோர்கள் அவர்களை திசை திருப்ப மீண்டும் விளையாட்டு பொருள்களின் பக்கம் திரும்பி இருக்கின்றனர், டெடி, கார்கள், குட்டி சைக்கிள்கள், ரிமோட் கார்கள், ரிமோட் ஹெலிகாப்டர்கள், குட்டி ஜேசிபிக்கள் என குழந்தைகளுக்கு விருப்பமான பல விளையாட்டு பொருள்களின் விற்பனை மீண்டும் சந்தைகளில் அதிகரித்து இருக்கிறது.



சரி அந்த வகையில் ஒரு விளையாட்டு சாமான்கள் கடை வைப்பதற்கு குறைந்த பட்சம் ஒரு 5 இலட்சம் முதலீடு தேவைப்படும், சென்னை, மும்பை, பெங்களுரு உள்ளிட்ட நகரங்களில் விளையாட்டு பொருள்கள் மொத்த விலையில் கிடைக்கின்றன, உங்களதுய் நேரடி கொள்முதலை இந்த நகரங்களில் எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், கடையை பொருத்தவரை நிச்சயம் ஒரு நகரத்தின் மார்க்கெட்டின் மையத்தி இருப்பது அவசியம்.

கடையின் வடிவமைப்பு குழந்தைகளின் கண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும், அப்போது தான் குழந்தைகள் எளிதாக கடைக்குள் வர அந்த அமைப்பு தூண்டும், Toy களை பொறுத்தமட்டில் குறைந்த பட்சம் 60% சராசரியாக ஒவ்வொரு விளையாட்டு பொருள்களிலும் இலாபம் இருக்கும், நல்ல மக்கள் கூட்டம் உள்ள பகுதிகளில் உங்கள் கடை அமையுமானால் மாதம் ரூ 40,000 முதல் 60,000 வரை வருமானம் பார்க்கலாம்.

" கடையின் வடிவமைப்பு என்பது ஒரு Toy கடைக்கு மிக மிக அவசியம், அதற்கு என்று தனியாக ஒரு இலட்சங்களை வாரி இறைத்தாலும் கூட பரவாயில்லை, கடையின் மூலம் ஒரு ஈர்ப்பை குழந்தைகளிடையே ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் இலாபங்களில் கொழிக்கலாம் "