Thiruneer Making Business Plan - திருநீர் என்பதி கோவில்களில், வீடுகளில் தினசரி பயன்படுத்தும் ஒரு மகிமை மிக்க பொருளாக பார்க்கப்படுகிறது, பெரும்பாலானோர் எங்கு வெளியில் சென்றாலும் இன்னமும் நெற்றியில் திருநீர் அல்லது பட்டை அணிவதை வழக்கமாக வைத்து இருக்கின்றனர், எந்த கோவிலுக்குள் நுழைந்தாலும் பூஜை முடிந்ததும் முதலில் கொடுக்கப்படும் பிரசாதம் திருநீர் ஆக தான் இருக்கிறது.
ஆனாலும் தற்போதெல்லாம் தூய திருநீர் கிடைக்கிறதா என்றால், காரம் அதிகம் கலந்த சுண்ணாம்பு போன்ற திருநீர் தான் பெரும்பாலும் கிடைக்கிறது, அந்த வகையில் சாணங்களின் மூலம் திருநீர் தயாரித்து அதை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம், முதலில் இதற்கும் ஒரு எரி உலை அமைக்க வேண்டும், அது நகரத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் இருந்தால் இன்னும் பெட்டர்.
சாணங்களை பொறுத்தவரை மாடுகள் வைத்திருப்பவர்களிடம் எப்படியும் உரக்குழி இருக்கும், அந்த உரக்குழியில் போடப்படும் சாணங்கலை ஒரு வாரத்திற்கு ஒரு முறை கொள்முதல் செய்து கொள்ளலாம், பொதுவாக ஒரு டிராக்டர் முழுதான சாணம் என்பது ரூ 1000 க்கு எடுப்பார்கள், முதலில் சாணத்தை வறட்டி போல ஆக்கி நன்கு காய வைக்க வேண்டும்.
நன்கு காய்ந்ததும் சாணங்களை மொத்தமாக எடுத்து எரி உலையில் நன்கு சாம்பலாகும் வரை எரிக்க வேண்டும், பின்னர் அந்த சாம்பலை எடுத்து அரித்து, அதனுடன் வாசத்திற்காக காய்ந்த ரோஜாக்களை அரைத்து சேர்க்கலாம், சாணங்களை எரிக்கும் போது கொஞ்சம் வெட்டி வேரையும் வெட்டி உள்ளே போட்டால் அது இன்னும் திருநீறுக்கு வாசம் கொடுக்கும்.
" பின்னர் தயாரித்த திருநீரை பாக்கெட்டுகள் இட்டு கோவில்கள், மொத்த கடைகள், பூஜை சாமான் கடைகள் போன்ற இடங்களில் சந்தைப்படுத்தினால், குறைந்தபட்சம் மாதம் ரூ 30000 வரை வருமானம் பார்க்கலாம் "