• India
```

இலட்சங்களில் வருமானம் தரும்...Tempered Glass மற்றும் Back Cover Printing தொழில்...!

Tempered Glass And Mobile Back Cover Printing Shop

By Ramesh

Published on:  2024-12-03 17:06:48  |    569

Tempered Glass And Mobile Back Cover Printing Shop - நல்ல இலாபம் தரும் வகையில் Tempered Glass மற்றும் Back Cover Printing தொழில் செய்வது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Tempered Glass And Mobile Back Cover Printing Shop - Tempered Glass என்பது மொபைல்களில் டிஸ்ப்ளேவை பாதுகாப்பதற்கு ஒட்டப்படும் ஒரு மென்மையான கண்ணாடி, பொதுவாக ஒரு மொபைல் வாங்கியதும் பயனர்கள் தேடி அலைவது Tempered Glass மற்றும் Back Cover யை தான், ஒரு சில மொபைல் நிறுவனங்கள், Back Cover களை மொபைல் வாங்கும் போதே தந்தாலும் கூட அது எந்த அளவிற்கு மொபைலின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரும் என்பது தெரியாது.

சரி, முதலில் இந்த தொழில் இறங்குவதற்கு இரண்டு மெசின்கள் தேவைப்படும், ஒன்று டெம்பர் கிளாஸ் கட்டிங் மெசின் இன்னொன்று Back Cover ப்ரிண்டிங் மெசின் இந்த இரண்டும் நிச்சயம் தேவைப்படும், ப்ரிண்டிங் குவாலிட்டி பொருத்து Back Cover Printing மெசின் ரூ 8,000 முதல் 35,000 வரையில் கிடைக்கிறது, டெம்பர் கிளாஸ் கட்டிங் மெசின் என்பது 10,000 முதல் 40,000 ரூபாய் வரை கிடைக்கிறது.



பொதுவாக ஒரு டெம்பர் கிளாஸ்க்கான ஒட்டு மொத்த செலவு என்பது ரூ 30 முதல் 40 ரூபாய் தான், அது போல ஒரு Back Cover Printing க்கு ஆகும் ஒட்டு மொத்த செலவு என்பது ரூ 40 முதல் 60 ரூபாய் தான், சந்தைகளில் ஒரு டெம்பர் கிளாஸ் ஒட்டி தருவதற்கு ஒரு மொபைலுக்கு ரூ 100 முதல் 150 வரை வசூலிக்கப்படுகிறது, ஒரு Back Cover ப்ரிண்டிங்கிற்கு ரூ 250 முதல் 400 வரை வாங்கப்படுகிறது.

ஒரு சிறிய இடம், மெசின்களை வைக்க ஒரு அறை, ஒரு விளம்பர பலகை, நல்ல மார்க்கெட் ஏரியா அருகில் கடை, கொஞ்சம் அனுபவம் இவ்வளவும் இருந்தால் போதும் இந்த தொழில் துவங்குவதற்கு, ஒரு இரண்டு இலட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் இத்தொழில் மூலம் நீங்கள் மாதம் 1 இலட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும், ஈ காமெர்ஸ் மூலமும் சேவைகளை விரிவுபடுத்தினால் இன்னும் இலாபத்தை அள்ளலாம்.