TeaFit Jyoti Bharadwaj Startup Story - இயற்கையான முறையில் தேநீர் குளிர்பானம் தயாரித்து வருடத்திற்கு கோடிகளில் வருமானம் பார்க்கும் ஜோதி பரத்வாஜ் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஜோதி பரத்வாஜ் ஒரு MBA பட்டதாரி, இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ்சில் MBA முடித்து விட்டு தொழில் ஆசையில் தொழிலை நோக்கி புறப்பட்டார், ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தான், என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என யோசித்துக் கொண்டே இருக்கும் போதே அவரது அப்பா, அம்மா இருவரில் இருந்து ஒரு தொழில் ஒன்றை கற்றுக் கொள்கிறார்.
அதாவது ஜோதி பரத்வாஜ் அவர்களின் அப்பா அம்மா என இருவரும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள், ஆனாலும் வீட்டில் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது, அந்த வகையில் ஹெல்த்தியான டீயை வீட்டிலேயே தயாரித்து எளிதில் கரையக்கூடிய சர்க்கரையை பயன்படுத்து போட்டு குடிப்பார்களாம், அதை பார்த்த ஜோதிக்கு அதையே தொழிலாக மாற்றலாம் என தோன்றி இருக்கிறது.
பொதுவாக சர்க்கரை வியாதி வந்தவர்கள் டீ, காபி என எதையும் குடிக்க கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள், ஆனாலும் அவர்களால் குடிக்காமலும் இருக்க முடியாது, அந்த வகையில் அவர்களுக்கு ஏற்றவாறு இயற்கையான சர்க்கரையுடன் மார்க்கெட்டில் டீ இருக்கிறதா என்றால் இல்லை, ஆதலால் அந்த ஐடியாவை இறுக்கமாக ஜோது பிடித்துக் கொண்டார்.
க்ரீன் டீ, இன்ஸ்டன்ட் டீ, பிளாக் டீ, பார்லி டீ என ஹெர்பல் முறையில் இயற்கையான சர்க்கரை சேர்த்து TeaFit குளிர்பானங்களை தயாரித்து சந்தைப்படுத்தினார், சுவையும் தரமும் நன்றாக இருந்தபட்சத்தில் மார்க்கெட்டில் தேவை அதிகரித்தது, முதலில் மும்பையில் மட்டும் சந்தைப்படுத்தப்பட்ட TeaFit பின்பு அருகில் இருக்கும் மாநிலங்களுக்கும் மார்க்கெட்டிங் செய்யப்பட்டது.
" தற்போது ஜோதி பரத்வாஜ்யின் TeaFit வருடத்திற்கு 3.5 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது, இது போக ஷார்க் டேங்க் சீசன் 2 வில் பங்கேற்ற ஜோதி பரத்வாஜ்க்கு 50 இலட்சம் முதலீடும், 8% ஈகுவிட்டியும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது "