• India
```

நல்ல இலாபம் தரும் டீ கடை வைப்பது எப்படி?

Tea Shop Business Ideas in Tamil | Tea Shop Business Profit

By Dharani S

Published on:  2024-09-25 17:31:00  |    421

Tea Shop Business Ideas in Tamil-சமூக வலை தளங்களில் பலரும் தற்போது பேசி வரும் தொழில் ரீதியான டாபிக், ’பேசாம டீ கடை வச்சிடலாம் போலயே’ என்பது தான். சரி அவ்வளவு எளிதில் டீ கடை வைத்து விட முடியுமா? அப்படியே வைத்து விட்டாலும் பெரிதாக இலாபம் பார்த்து விட முடியுமா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சரி, டீ கடை வைப்பது அவ்வளவு எளிதா?
ஆம், டீ கடை வைப்பது என்பது மிக மிக எளிது தான், மற்ற தொழிலை காட்டிலும் என்பது முதலீடு என்பதும் மிக மிக குறைவு தான். ஆனால் வெறும் டீ, காபி என்பது மட்டும் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களை கடைக்குள் இழுப்பது என்பது கடினம். கூடவே சூடாக வடை, பஜ்ஜி, சம்சா, பிஸ்கட்டுகள், கூடவே தினசரி பேப்பரும், டீ கடை முன் சேர்களும் வைக்கும் போது வாடிக்கையாளர்கள் கடைக்குள் நுழைய வாய்ப்புகள் இருக்கும்.
சரி, டீ கடையை எங்கு வைக்கலாம், சரியாக எந்த நேரத்தில் டீ அடிக்க துவங்கலாம்?
பொதுவாக ஒரு டீ கடை புதிதாக துவங்கும் போது, தொழிலாளர்கள் அதிகம் கூடும் பகுதியில் வைக்கலாம், மருத்துவமனைகள் அருகில் வைக்கலாம், பேருந்து நிலையங்களின் அருகில் வைக்கலாம், தினமும் காலை 4 மணிக்கே டீ கடை துவங்கி, டீ அடிக்க துவங்கி விட வேண்டும், அதிகாலை, சாயங்காலம் என்ற இரு நேரங்கள் தான் டீ அதிகமாக ஓடும் நேரம். அந்த இரு நேரங்களிலும் கடைகளை பரபரப்பாக எப்போதும் வைத்து இருக்க வேண்டும். காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் சூடாக சட்னியோடு வடை போடும் போது டீயின் ஓட்டமும் அதிகமாக இருக்கும்.



சரி, இந்த டீ கடையில் இலாபம் எவ்வளவு இருக்கும்?
சுமாராக 1 லிட்டர் பாலில் 20-25 கப்கள் டீ இருக்கும். ஒரு டீ 10 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட, 1 லிட்டர் பால் மூலம் 200 ரூபாய் சம்பாதிக்க முடியும். சீனீ மற்றும் தேயிலை, இஞ்சிகளுக்கு ஒரு 50 ரூபாய் என வைத்துக் கொண்டால் இலாபம் மட்டும் 150 ரூபாய் நிற்கும். ஒரு நாளைக்கு ஒரு 15 லிட்டர் பால் ஓட்டினால், இலாபம் மட்டும் தனியாக 2,250 ரூபாய் வரை பார்க்க முடியும். இது டீயில் மட்டும் தனியாக ஒரு நாளுக்கு கிடைக்கும் இலாபம், வடை, பிஸ்கட்டுகளில் ஒரு 500 ரூபாய் என வைத்துக் கொண்டாலும் ஒட்டு மொத்தமாக ஒரு நாளுக்கு 2,750 ரூபாய் இலாபம் நிற்கும். இதில் வடை மாஸ்டர் செலவுகள், இதர செலவுகள் என்று ஒரு ஆயிர்ம் ரூபாய் கழித்துக் கொண்டால் நாள் ஒன்றுக்கு இலாபம் என 1,750 ரூபாய் கையில் இருக்கும். மாதத்திற்கு என்று பார்த்தால் ஒரு சின்ன டீ கடையிலேயே 50,000 வரை இலாபம் பார்க்க முடியும். வெறும் 15 லிட்டர் ஓட்டத்திற்கான இலாபம் மட்டுமே இவ்வளவு என்றால் 25 லிட்டர், 30 லிட்டர் பால் ஓட்டுகின்ற டீ கடைகளில் எவ்வளவு இலாபம் இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

தகுந்த இடம், முறையான உழைப்பு, சரியான திடத்துடன் சுவையுடன் டீ அமையும் பட்சத்தில் டீ கடை உங்களுக்கு மிக இலாபகரமான தொழிலாக அமையும் என்பதில் ஐயமில்லை