Sugarcane Selling Business Ideas - பொதுவாக பொங்கல் என்றால் அதில் முக்கியமாக இடம் பெறுவது கரும்பு, கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகை இல்லை என்றே சொல்லி விடலாம், அந்த அளவிற்கு கரும்பு பொங்கல் பண்டிகையில் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது, புதியதாக திருமணம் ஆனவர்களுக்கும் பொங்க பொடி என்ற பெயரில் கரும்புக் கட்டுகளை பெண் வீட்டார் சுமந்து மணமகன் வீட்டில் சேர்ப்பர்.
அந்த வகையில் கரும்பு கட்டு என்பது பொங்கலில் ஒரு பாரம்பரியம் ஆகி விட்டது, தமிழகத்தில் எடுத்துக் கொண்டால் கள்ளக்குறிச்சி, தேனி, ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கரும்பு அதிகமாக பயிரிடப்படுகிறது, நீங்கள் மொத்த விலைக்கு வாங்க நினைத்தால் நேரடியாக இந்த ஏதாவது ஒரு மாவட்டங்களுக்கு சென்று விவசாயிகள் அல்லது கரும்பு மண்டிகளில் கொள்முதல் செய்து கொள்ளலாம்.
நீங்கள் நேரடி கொள்முதலில் ஈடுபடும் போது ஒரு கரும்பு ரூ 16 முதல் 25 ரூபாய் வரைக்கு வாங்கலாம், ஒரு கட்டுக்கு 10 கரும்புகள் வைத்து, சந்தையில் ரூ 350 முதல் 400 வரை விற்கலாம், ரஷ்சான நேரங்களில் ரூ 500 க்கு கூட விற்கிறார்கள், ஒரு இரண்டாயிரம் கரும்பை இறக்கி 200 கட்டுகள் ஆக போட்டு இரண்டு முக்கிய சந்தைகளில் தெருக்கடைகள் போட வேண்டும்.
ஜோடி கரும்பாக விற்கும் போது ஒரு கரும்பு 50 ரூபாய்க்கு விற்பார்கள், முதலீடு ஒரு 30,000 முதல் 40,000 வரை போட்டு எப்படியும் ஒரு 80,000 வரை வருமானம் பார்த்து விடலாம், தை பிறக்கும் போது உங்கள் கைகளில் குறைந்த பட்சம் ஒரு 80,000 ரூபாய் இருக்கும், ஒரிரு நாட்களில் 80,000 ரூபாய் வருமானம் என்றால் இப்போதே கரும்பை கொள்முதல் செய்ய கிளம்பலாமே.