Sugar Cosmetics - வினிதா சிங், தனது 6 மாத கர்ப்ப காலத்தில் 20 மராத்தான் போட்டிகளில் பங்கேற்றவர். அவர் தொடங்கிய சுகர் காஸ்மெட்டிக்ஸ் (Sugar Cosmetics) நிறுவனம், இளம்பெண்களிடையே வேகமாக பிரபலம் பெற்றுள்ளது.அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குஜராத்தில், ஆனந்த் மாவட்டத்தில் பிறந்த வினிதா சிங், டெல்லி பப்ளிக் ஸ்கூலில் தனது கல்வி முடித்த பிறகு, 2015-ல் ஐடி மெட்ராஸில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 2017-ல் ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ முடித்து, தற்போது அவரது நிறுவனமான சுகர் காஸ்மெட்டிக்ஸ் (Sugar Cosmetics) இளம்பெண்களிடையே பிரபலம் பெற்றுள்ளது.
சுகர் காஸ்மெட்டிக்ஸ், அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாக, Instagram மற்றும் Youtube மூலம் சந்தைப்படுத்தப்படுகிறது.ஆரம்பத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யபட்ட தயாரிப்புகள், தற்போது 130 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.