உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பூஸ்டரை பாதுகாப்பாக தரையிறக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜனவரி 16 – 7வது சோதனையில் டெக்சாஸ் ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் விண்ணில் அனுப்பப்பட்டது.
சில நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட் இரண்டாக பிரிந்து, அதன் பூஸ்டர் பகுதி நிலத்தை நோக்கி இறங்க தொடங்கியது. ஆனால் 8.5 நிமிடங்கள் கழித்து ராக்கெட்டின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், "இதுபோன்ற சோதனைகள் மூலம் நாங்கள் புதியவை கற்றுக்கொள்கிறோம். எதிர்காலத்துக்காக இது ஒரு முக்கிய முன்னேற்றம் என்று தெரிவித்துள்ளது.