• India
```

சூப் கடை...மாதம் ரூ 30000 வரை வருமானம்...தினசரி 4 மணி நேரம் மட்டும் உழைப்பு...!

Soup Shop Ideas Tamil

By Ramesh

Published on:  2024-12-02 17:04:23  |    677

Soup Shop Ideas Tamil - நல்ல இலாபம் தரும் வகையில் சூப் கடை எப்படி வைப்பது என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

Soup Shop Ideas Tamil - சூப் என்பதில் பல வகைகள் இருக்கின்றன, ஆட்டு கால் சூப், காய்கறி சூப், கசாயம் சூப், எலும்புக் கறி சூப் என பல வகைகளாக விற்பனை விற்பனை செய்யப்படுகின்றன, பொதுவாக அனைத்துமே நல்ல மருத்துவ குணங்கள் மிக்கவை, மக்கள் தற்போது எல்லாம் ஹெல்த்தில் கன்சர்ன் கொள்வதால் சூப் வகைகளுக்கான டிமாண்ட் என்பது அதிகரித்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

பொதுவாக சூப் கடை வைப்பதற்கு பெரிய முதலீடு எல்லாம் தேவைப்படாது, பெரும்பாலும் சூப் கடைகள் தள்ளுவண்டி கடைகளில் தான் வைக்கப்படுகின்றன, தள்ளுவண்டி இருக்கும் பட்சத்தில் அது ஒரு சந்தைப் பகுதியில் கொஞ்சம் காலியான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும், தேவையான பொருட்களான எலும்பு, காய்கறி, ஆட்டுக்கால் உள்ளிட்டவைகளை காலை முதலே கொள்முதல் செய்து கொள்ள வேண்டும்.



பெரும்பாலும் சூப் கடை வைத்து இருப்பவர்கள் சிக்கன் 65 யும் விற்பனை செய்கிறார்கள், உங்களுக்கு ஏதுவாக இருந்தால் அதையும் வைத்துக் கொள்ளலாம், பெரும்பாலும் சாயங்கால நேரங்களிலேயே சூப் கடை வைக்கப்படுகிறது, மாலை ஒரு 5:30 மணிக்கு ஆரம்பித்து 10 மணிக்குள் முடித்து விட்டு செல்கின்றனர், எப்படி பார்த்தாலும் ஒரு பகுதி நேர வேலை போல தான்.

பொதுவாக ஒரு சூப்பின் விலை சந்தைகளில் ரூ 20 முதல் 50 வரை விற்கப்படுகிறது, கிராமங்கள் என்றால் ரூ 20 முதல் 30 ரூபாய், நகரங்கள் என்றால் ரூ 30 முதல் 50 ரூபய் வரை விற்கப்படுகிறது, சிக்கன் 65 என்பது ரூ 50 முதல் ரூ 80 வரை விற்கப்படுகிறது, நாள் ஒன்றுக்கு ஒரு 50 சூப் மற்றும் ஒரு 3 கிலோ சிக்கன் விற்றால் கூட தினசரி ரூ 1000 முதல் 2000 வரை வருமானமாக கையில் நிற்கும்.

" மாதத்திற்கு என்று கணக்கிட்டால் பகுதி நேரம் வேலை பார்த்தே சூப் கடை மூலம் சராசரியாக ஒரு 30,000 முதல் 40,000 வரை வருமானம் ஈட்ட முடியும் "