• India

மனு எழுதி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால்...மாதம் ரூ 15000 வரை வருமானம்...!

Small Business Ideas For Handicapped

By Ramesh

Published on:  2024-12-21 17:40:38  |    737

Small Business Ideas For Handicapped - பொதுவாக வட்டாட்சியர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம் இது போன்ற அலுவலகங்களில் மக்கள் ஏதும் விவரங்களை கேட்க சென்றாலோ அல்லது ஏதாவது ஒரு விடயத்திற்கு பதிவு செய்ய நேர்ந்தாலோ, உதவி தொகைக்கு பதிவு செய்ய நேர்ந்தாலோ மனு மற்றும் விண்ணப்பம் பூர்த்தி செய்வது அத்தியாவசியம் ஆகிறது, படித்தவர்களே ஆனாலும் கூட இதில் திணறி தான் நிற்கின்றனர்.

அந்த வகையில் இவ்வாறாக அலுவலகத்தின் முன் ஒரு சின்ன கூண்டு கடை அமைத்துக் கொண்டு, மனு எழுத, விண்ணப்பம் பூர்த்தி செய்ய திணறி நிற்பவர்களுக்கு உதவிகரமாக மனு எழுதி, விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க வருமானம் ஈட்ட முடியும், பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த தொழில் ஒரு குறிப்பிடத்தக்க வருமானத்தை தருவதாக அமைகிறது.



காலை 8 முதல் 9 மணிக்கே வட்டாட்சியர் மற்றும் கலெக்டர் அலுவலகங்களுக்கு மனு கொடுக்க ஆட்கள் வந்த வண்ணம் இருப்பார்கள், அவர்களுக்கு முன்னதாக நீங்கள் சென்று கடையில் உட்காரும் போது தான் உங்களிடம் உதவி கோருவார்கள், கூடுமான வரை அலுவலகங்களில் கிடைக்கும் அத்துனை சேவைகள் குறித்த தகவல்களையும் அதற்கு என்ன மனு நிரப்ப வேண்டும் என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும்.

மனு ஸ்டாம்ப்கள், ஒட்டுவதற்கான பசை, பேனா, A4 சீட்கள், ஒரு சில விண்ணப்ப நகல்கள் இவ்வளவு உங்கள் கைகளில் இருந்தால் போதுமானதாக இருக்கும், ஒரு மனு மற்றும் விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு 50 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு 10 மனு மற்றும் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால் கூட தினசரி ரூ 500 வரை சம்பாதிக்க முடியும், மாதத்திற்கு என்று வைத்துக் கொண்டால் சராசரியாக ரூ 10,000 முதல் 15,000 வரை சம்பாதிக்க முடியும்.