Shrimp Farming Business - முதலில் இறால் பண்ணை குறித்த தெளிவு இல்லாமல் இறால் பண்ணையை துவங்குவது ரிஸ்க், அந்த வகையில் தமிழக அரசு சார்பிலேயே இறால் பண்ணைக்கான இலவச கோச்சிங் வழங்கப்படுகிறது, அதன் மூலம் கொஞ்சம் கற்றுக் கொண்டு வேண்டுமானால் இத்தொழில் தைரியமாக களம் இறங்கலாம், கையில் குறைந்தபட்சம் ஒரு 5 முதல் 7 இலட்சம் ஆவது தொழிலை முதன் முதலில் துவங்க இருக்க வேண்டும்.
நிலங்களை குத்தகைக்கோ அல்லது சொந்தமாகவோ வாங்கிக் கொள்ளலாம், கடற்கரையோர மணல் பரப்புகள் இறால் வளர்ப்பிற்கு உகந்ததாக இருக்கும், உப்பள பகுதிகளில் நிறைய குட்டைகள் இருக்கும், உபரி நீர் எடுக்கவும் வாய்ப்பாக அமையும் பகுதி என்பதால் அந்த இடத்தை தெரிவு செய்யலாம், பண்ணைக்கான முறையான ஆவணங்கள், லைசென்ஸ் எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம்.
சரி குட்டை கிடைத்து விட்டது, எப்படி துவங்குவது என்றால்,முதலில் இடத்தை உழுது காய வைத்து உரங்கள், ஜிப்சங்கள், சுண்ணாம்புக்கல் போன்றவற்றால் நிரப்பிக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு 2 அடிக்கு நீரை நிரப்பி ஒரு 5 நாட்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் 3 1/2 அடி அல்லது 4 அடிக்கு நீரை நிரப்பி 1 ஏக்கருக்கு 1 இலட்சம் இறால் குஞ்சுகளை அதில் விடலாம்.
1 ஏக்கருக்கான இறால் உணவு, மருந்து வகைகள், ஆக்சிஜன் ட்யூப் செலவுகள், வேலையாட்கள் கூலி, பராமரிப்பு என எல்லாம் சேர்த்து கிட்டதட்ட ஒரு பருவ வளர்ப்பிற்கு 1.5 இலட்சம் வரையில் ஆகலாம், முதல் 60 நாள் முடிந்ததுமே ஒரு 400 கிலோ வரையிலும் இறால்களை சந்தைப்படுத்த முடியும், 90 முதல் 100 நாட்களில் 1200 கிலோ வரையில் இறால்கள் அந்த 1 ஏக்கரில் உருவாகும்.
" சராசரியாக 1 கிலோ 400 ரூபாய் என எடுத்துக் கொண்டால் கூட 1 ஏக்கரில் 6,40,000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும், அதில் செலவு 1.5 இலட்சத்தை கழித்துக் கொண்டால் 1 ஏக்கர் இறால் பண்ணையிலேயே ஒரு பருவத்திற்கு 5 இலட்சங்கள் வரை சம்பாதிக்க முடியும், சரியான திட்டமிடல் மார்க்கெட்டிங் இருந்தால் பல ஏக்கரில் பண்ணைகள் அமைத்து கோடிகளில் கூட வருமானம் பார்க்க முடியும் "